பாடுவார் முத்தப்பர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாடுவார் முத்தப்பர் (1767 - 1829) தமிழ்நாட்டு சிற்றிலக்கியப் புலவர் வரிசையில் புகழ் பெற்றவர்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
தமிழ் நாடு செட்டி நாட்டில், கீழச் சிவல்பட்டியில் நகரத்தார் மரபில் அழகப்ப செட்டியார், லெட்சுமி ஆச்சி ஆகியோரின் புதல்வராய் 1767 இல் பிறந்தார் முத்தப்பர். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்று தமிழின் இலக்கிய இலக்கணங்களை மிதிலைப்பட்டியில் வாழ்ந்த காவிராயர்களிடம் கற்றுணர்ந்தார்.
இளமையிலேயே பாடும் திறமை பெற்றிருந்த முத்தப்பர் குன்றக்குடி முருகன் பேரில் பதிகம் பாடி அருட் புலமை பெற்றார். தமது குல வழக்கமான வணிகத்தில் ஈடுபடாது தமிழை வளர்ப்பதில் ஈடுபட்டார். இதனால் அவர் பாடுவார் முத்தப்பர் என அழைக்கப்பட்டார்.
[தொகு] நூல்கள் இயற்றல்
- பழந்தமிழ் வரலாற்றுச் செய்திகளும், நகரத்தார் சமூகம் பற்றிய அரிய குறிப்புகளும் அடங்கிய நகர வாழ்த்து என்ற செய்யுள் நூலை இயற்றினார்.
- நேமம் சிவன் கோயிலில் வீற்றிருக்கும் செயங்கொண்ட சோழீசரைப் பற்றி செயங்கொண்டார் சதகம் என்ற பெயரில் பாடியுள்ளார். 100 பாடல்களைக் கொண்ட இச்சதகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழியை இணைத்துள்ளார். இது 1893 ஆம் ஆண்டில் அச்சாகியது.
- திருமுக விலாசம்
- குதிரையடி என்ற சிற்றிலக்கியம்
- குளூவ நாடகம்
- பழனியாண்டவர் பதிகம்
[தொகு] உசாத்துணை
- குன்றக்குடி பெரியபெருமாள், தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள், சென்னை: 1996