பூரி (உணவு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூரி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு இந்திய உணவாகும். இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் (கிட்டத்தட்ட 12 செ.மீ விட்டத்தில்) மெலிதாகத் தேய்த்து பின்னர் நல்லெண்ணெய்அல்லது நெய்யில் பொறித்து தயாரிக்கப் படுகிறது. இதை விட பெரிய அளவில் நன்கு உப்பலாக பொறிக்கப்படும் பூரி, சோழா பூரி என்று அழைக்கப்படுகிறது.