பெட்ரோலியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெட்ரோலியம் என்பது புவியில் தோன்றும் இயற்கையாகக் காணப்படும் நீர்ம நிலையில் உள்ள பல ஹைடிரோகார்பன்களின் கலவை ஆகும். இந்த ஹைடிரோகார்பன்கள் வேறுபட்ட நீளங்களைக் கொண்டவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, ஆல்க்கேன்கள் ஆகும். இவற்றின் நீளம் C5H12 இல் இருந்து C18H38 வரை பொதுவாகக் காணப்படுகிறது. இதனினும் குறைந்த நீளமுடையவை எரிவளி அல்லது எரிவளி நீர்மமாக் கருதப்படுகின்றன. நீளமான ஹைடிரோகார்பன் தொடர்கள், திட நிலையில் உள்ளன. மிக நீளமான ஹைடிரோகார்பன்கள் நிலக்கரி ஆகும்.
இயற்கையில் கிடைக்கும் பெட்ரோலியத்தில் உலோகமற்ற தனிமங்களான கந்தகம், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்றவையும் காணப்படலாம். பொதுவாக இது கருப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.