ஹைடிரோகார்பன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹைடிரோகார்பன் (அல்லது ஐதரோகாபன்) என்பது கரிமம் (C) மற்றும் ஹைட்ரஜன் (H) அணுக்களால் ஆக்கப்பட்ட வேதியியல் சேர்மங்களைக் குறிக்கும். ஹைடிரோகார்பன்கள் கரிம அணுக்களை அடிப்படைச் சட்டமாகக் கொண்டுள்ளன. ஹைடிரஜன் அணுக்கள் இச்சட்டத்துடன் இணைந்துள்ளன. தீப்பற்றி எரியக்கூடிய தன்மை கொண்ட ஹைடிரோகார்பன்களே இயற்கை எரிபொருட்களிலான பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றில் காணப்படும் முதன்மைக்கூறு ஆகும். இயற்கையில் மிகுந்திருக்கும் ஹைடிரோகார்பன் மெத்தேன் ஆகும்.
[தொகு] ஹைடிரோகார்பன்களின் வகைகள்
- அரோமாட்டிக் ஹைடிரோகார்பன்கள் - இவை குறைந்தது ஓர் அரோமாட்டிக் வளையத்தையாவது கொண்டுள்ளன. இவை அரீன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- நிறைவுற்ற ஹைடிரோகார்பன்கள் - இவை ஆல்க்கேன்கள் அல்லது அலிஃவாட்டிக் ஹைடிரோகார்பன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- நிறைவுறா ஹைடிரோகார்பன்கள் - ஆல்க்கீன், ஆல்க்கைன் ஆகியவை இதில் அடங்கும்.