மருதநாயகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முகமது யூசுப் கான் என்றழைக்கப்பட்ட மருதநாயகம் பிள்ளை மதுரை மாவட்டத்தில் இராமநாதர் பகுதியில் உள்ள பண்ணையூரில் 1725 ஆம் ஆண்டில் ஒர் இந்துவாகப்பிறந்து பின்னர் ஒர் இஸ்லாமியராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு போர்த்துக்கீசிய கிருத்துவ அம்மையாரை மணம் செய்து கொண்டார்.ஆர்க்காட்டு படைகளில் படைவீரராகவும் பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு தலைமை தாங்கினார்.ஆங்கிலேயரும் ஆற்காட்டு நவாப்புகளும் மருதநாயகத்தினை தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக போரில் ஈடுபடச்செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர்.பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் ஆர்க்காட்டு நவாப்புகளுக்கும் இடையே நடந்த பிரிவினை காரணமாக மருதநாயகத்தின் நம்பிக்கைக்குரியவர்களான மூவரால் நயவஞ்ஞகமான முறையில் காட்டிக்கொடுக்கப்பட்டு பின்னர் 1764ஆம் ஆண்டில் மதுரையில் தூக்கிலிடப்பட்டார்.