மலேரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மலேரியா, கொசுக்களால் (நுளம்புகள்) பரவும் ஒரு நோயாகும். ஆண்டு தோறும் 350 முதல் 500 மில்லியன் மக்கள் மலேரியாத் தொற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களில் ஏறத்தாழ 1.3 - 3 மில்லியன் மக்கள் வரையில் இறக்கிறார்கள். இது ஒவ்வொரு முப்பது வினாடிகளுக்கு ஓர் இறப்பாகும். அனோபிலிஸ் வகைப் பெண் கொசுக்களாலேயே மலேரியா பரப்படுகின்றது.