முகாமைத்துவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முகாமைத்துவம் (தமிழக வழக்கு - மேலாண்மை, management) எனும் பதம் ஊழியர்களைக் கொண்டு அமைப்பொன்றினது (குறிப்பாக வணிகத்துறை) சகல வளங்களையும் பயனுறுதிமிக்க வண்ணம் முறைப்படுத்தி வழிநடத்திச்செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகளை விபரிக்கும். The term "management" characterizes the process of and/or the personnel leading and directing all or part of an organization (often a business) through the deployment and manipulation of resources (human, financial, material, intellectual or intangible).
அமைப்பொன்றில் இந்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளுபவர் முகாமையாளர் (manager) எனப்படுவார். இங்கு வளங்கள் எனப்படுவது அமைப்பொன்றில் காணப்படும் மனிதவளம்,நிதி வளம்,பொருண்மை வளம்,புலமைசார் வளம்,கட்புலனாகா வளம் என்பவற்றினை வகைக்குறிக்கும்.
[தொகு] வணிக முகாமைத்துவம்
மேரி பார்க்கர் ஃபாலட் (Mary Parker Follett) (1868-1933), என்பவரே முகாமைத்துவத்திற்கான முதலாவது வரைவிலக்கணத்தை முன்வைத்தவராவார். இவரின் கருத்தின்படி முகாமைத்துவம் என்பது "ஊழியர்களை கொண்டு கருமங்கள் ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடாகும்" ("the art of getting things done through people"). இவரை தொடர்ந்து பலரும் முகாமைத்துவத்திற்கு பலவித வரைவிலக்கணத்தினை அளித்துள்ளனர்.இறுதியாக "முகாமையாளர் என்ன செய்கின்றாரோ அதுவே முகாமைத்துவம்" என பொருள்படுத்தியுள்ளனர். இவற்றுக்கு காரணம் நிகழுலகில் முகாமைத்துவம் வளர்ந்துவரும் ஒரு துறையாக இருப்பது, முகாமைத்துவம் மட்டங்களுக்கிடையான ஆற்றப்படும் கருமங்களில் வேறுபாடு இருப்பதும் ஆகும்.
பொதுவாக நடைமுறையினில் நிருவாகமும் (administration) முகாமைத்துவமும் ஒரே கருத்தினில் புழங்கப்படுகின்றது,ஆயினும் நிருவாகம் என்பது உண்மையில் முகாமைத்துவத்திற்குள் அடங்கும் ஒர் பணியாகும் [ஆதாரம் தேவை].
[தொகு] முகாமைத்துவ கருமங்கள்
நிறுவனமொன்றின் நோக்கினை வெற்றிகரமாக அடையும் பொருட்டு முகாமைத்துவம் சில முக்கியமான கருமங்களை (functions) ஆற்றவேண்டியுள்ளது இத்தகைய கருமங்களே முகாமைத்துவ கருமங்கள் ஆகும். ஹென்றி பயோலின் (Henri Fayol) கருத்துப்படி:
- planning - திட்டமிடல்
- organizing - ஒழுங்கமைத்தல்
- leading - தலைமைத்துவம்
- co-ordinating - இயைபாக்கல்
- controlling - கட்டுப்படுத்தல் என்பன முகாமைத்துவ கருமங்களாகும்
இவை தவிர ஊக்கப்படுத்தல் (motivation),நெறிப்படுத்தல் (directing),ஊழியரிடல் (staffing) போற்றவையும் முகாமைத்துவ கருமங்களாகக் கொள்ளப்படும்.
[தொகு] முகாமைத்துவ செயற்பரப்புக்கள்
வார்ப்புரு:Col-3
- Administrative management நிருவாக முகாமைத்துவம்
- Accounting management கணக்கியல் முகாமைத்துவம்
- Agile management
- Arts management
- Association management
- Change management
- Communication management தொடர்பாடல் முகாமைத்துவம்
- Constraint management
- Cost management கிரய முகாமைத்துவம்
- Crisis management நெருக்கடி முகாமைத்துவம்
- Critical management studies
- Customer relationship management
- Earned value management
- Educational management
- Effective Sales Management
- Enterprise management
- Environmental management சுழல் முகாமைத்துவம்
|
|