மெய்யியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், கடவுள் என்று ஏதும் உண்டா, எது அழகு என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆய்வது பற்றிய துறை ஆகும். இத்துறை தத்துவம் என்றும் அறியப்படுகின்றது. தத்துவம் என்றால் உண்மை; உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம் முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும்.
தற்காலத்தில் அறிவியல் என்று அறியப்படும் துறை சிறப்புற்று வளரும் முன்னர், மெய்யியல் துறைதான் முன்னணியில் இருந்த அறிவுத்துறை ஆகும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்தியர்களும், கிரேக்கர்களும் பிற உலக மாந்த இனங்களும் பலவாறாக அடிப்படையாக சிந்தித்து தொகுத்து வைத்த கருத்துக்கள்தாம் மெய்யியலின் தொடக்கம். மெய்யியல் என்பது ஆங்கிலத்தில் Philosophy (ஃவிலாசஃவி) என்று கூறப்படுவது. இச்சொல் கிரேக்கச் சொல்லாகிய Φιλοσοφία (philo-sophia) என்பதில் இருந்து பெற்றது. இசொல்லின் பொருள் அறிவின் பால் காதல் (அறிவால் ஈர்க்கபடும் துறை) என்பதாகும்.
[தொகு] மெய்யியல் வரலாறு
காலத்தாலும் இடத்தாலும் மெய்யியல் கொள்கைகளிலும் கருத்துக்களிலும் வேறுபாடுகள் உண்டு. மாந்த இன வரலாற்றில் ஏறத்தாழ 6,000-7,000 ஆண்டுகளாகத்தான் சற்று விரிவாக அறியத்தக்க நாகரீகங்கள் அறியப்பட்டுள்ளன. சுமேரியர்கள், எகிப்தியர்கள், எலாமைட், அக்காடியர்கள், அசிரீயர்கள் போன்று நடுகிழக்கு நாடுகளில் வாந்த மக்களின் கருத்துக்களும் கோட்பாடுகளும் மெய்யியல் கூறுகள் கொண்டவை.
(வேதகால அறிஞர்கள் கோட்பாடுகள், புத்த, சமண மதக் கோட்பாடுகள், பழந்தமிழர் கோட்பாடுகள், சீனாவின் கன்ஃவூசியசு முதலியோர் கொள்கைகள், சாக்ரட்டீசுக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த கிரேக்க, மற்றும் ரோமானியர்களின் மெய்யியல் கொள்கைகள், பின்னர் இடைக்கால, தற்கால மெய்யியல் கொள்கைகள் பற்றி எழுதி விரிவாக்க வேண்டும்).
திருமூலர் முதல் சித்தர்களின் பாடல்களை அலசி ஆராய்ந்ததால் பல உண்மைகள் தெளிவாகப் புரியும்.