மௌனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மௌனி (Mowni), (பிறப்பு - சிதம்பரம்; இயற்பெயர் - மணி) தமிழ் எழுத்தாளர் ஆவார். மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
இவரது சிறுகதைகள் மௌனி கதைகள் என்ற பெயரில் வெளியாகியுள்ளன. கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதைவிடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் பலம். இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.