யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டோர் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகள், பின்னர் தீவிரமாக வெளிப்பட்ட தமிழ்த் தேசியவாத போக்குக்கு உந்திய ஒரு முக்கிய துன்பவியல் நிகழ்வு ஆகும்.