பேச்சு:வறுமை நிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏழ்மையா வறுமையா மிகப் பொருந்திய சொல்லாடல்? --Natkeeran 13:51, 25 மார்ச் 2007 (UTC)
வறுமையில் இருப்பவர் ஏழை. ஏழ்மையில் இருப்பவர் வறுமையாக முடியாது :) வறுமை தான் பொருத்தமான சொல்--ரவி 13:57, 25 மார்ச் 2007 (UTC)
ஏழ்மையில் இருப்பவர் ஏழை, வறுமையில் இருப்பவர் வறியவர்!! --Natkeeran 13:59, 25 மார்ச் 2007 (UTC)
ஏழ்மை degree என்ற கருத்துருவை கொண்டிருக்கின்றது. வறுமையில் நிலை இல்லை. வறுமை வறுமைதான். --Natkeeran 14:12, 25 மார்ச் 2007 (UTC)
வறுமை சிற்றூர்களிலும் படிக்காதவர்களும் கூட சொல்லும் சொல். ஏழை என்ற சொல் தான் அவர்கள் புழங்கக்கேட்டிருப்பதால் ஏழ்மையைக் காட்டிலும் வறுமை இயல்பான சொல்லாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏழை->ஏழ்மை ஊடகங்கள் உருவாக்கிய சொல்லோ என்றும் தோன்றுகிறது. வறுமைக்கோடு போன்று சொற்கள் இருப்பதையும் கவனிக்கலாம். ஏழ்மை என்ற சொல்லில் தனியாக degree இருப்பதாகத் தோன்றவில்லை. --ரவி 15:09, 25 மார்ச் 2007 (UTC)
வறுமை என்ற கட்டுரைத் தலைப்பே போதுமானதே. வறுமை நிலை என்று சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்--ரவி 15:16, 25 மார்ச் 2007 (UTC)
ரவி, ஒரு சமூகத்தில் எத்தனை வீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் கீழ் வாழ்கின்றார்கள் என்ற ஒரு முக்கிய அளவீடு உண்டு. அதை எப்படி குறிப்பிடலாம்? --Natkeeran 15:28, 25 மார்ச் 2007 (UTC)