வறுமைக்கு எதிரான அமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வறுமைக்கு எதிரான அமைப்பு அல்லது அக்சன் பாம் சர்வதேச இலாபநோக்கற்ற அரசு அல்லாத ஓர் அமைப்பாகும். இது உலகளாவிய ரீதியாக வறுமைக் கெதிராகப் போராடி வருகின்ற அமைப்பாகும்.
இவ்வமைப்பானது 1979ஆம் ஆண்டு பிரான்ஸில் பிரஞ்சு வைத்தியர்கள் (டாக்டர்கள்), விஞ்ஞானிகள் மற்றும் எழுத்தாளர்களால் ஆரம்பிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் 1985 இலும் ஸ்பெயினில் 1994 இலும் ஐக்கிய இராச்சியத்தில் 1995 இலும் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன,.
இவ்வமைபானது 40 நாடுகளில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு ஆண்டுதோறும் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைகின்றனர்.
[தொகு] இலங்கையில் இதன் பணி
இலங்கையில் 1996 ஆம் ஆண்டு முதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. யுத்தகாலங்களில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அவசர மனிதாபிமான உதவிகளையும் வழங்கிவருகின்றது. இச்சேவையில் ஈடுபட்டவர்களில் திருகோணமலை மூதூர் பகுதியில் அலுவலகத்தில் வைத்து அலுவலகச் சீருடையில் இருந்த 15 பணியாளர்களும் ஆகஸ்டு 5 2006 இல் ஆரம்பப் படுகொலையில் தப்பிய 2 ஊழியர்களையும் தேடிக் கண்டுபிடித்து மொத்தமாகப் 17 பேர் படுகொலை செய்யப் பட்டனர்.