வீரப்ப நாயக்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1572 முதல் 1595 வரை ஆகும். முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கனின் மகன். இவனது ஆட்சிகாலத்தில் அமைதி நிலவியது. சிதம்பரம் கோயிலின் வடக்கு கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டுவித்தான்.