ஹிரோஷிமா சமாதான நினைவகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜப்பானிய மொழியில், அணுகுண்டுக் குவிமாடம் (Atomic Bomb Dome) எனப் பொருள்படும் கென்பாக்கு டோம் (原爆ドーム) என்னும் பெயர் கொண்ட ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஜப்பானின், ஹிரோஷிமா நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா இந்த நகரத்தின் மீது முதலாவது அணுகுண்டைப் போட்டது. இதன் அவலங்களை நினைவுகூரும்வகையில் கட்டப்பட்டதே இந்த நினைவகம். இது 1996 ல் நிறுவப்பட்டது.
ஆரம்பத்தில் இக் கட்டிடம், செக் நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான, ஜான் லெட்செல் (Jan Letzel) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.