குவிமாடம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குவிமாடம் (dome) என்பது பல்வேறு கட்டிடங்களில் காணப்படுகின்ற கட்டிடக்கலைக் கூறுகளில் ஒன்று. இது ஒரு வகைக் கூரை அமைப்பு ஆகும். இது ஏறத்தாளக் கவிழ்த்து வைக்கப்பட்ட உள்ளீடற்ற அரைக் கோள வடிவத்தை உடையது. எனினும் குவிமாடங்களின் வடிவங்களில் வேறுபாடுகளையும் அவதானிக்கமுடியும். சில கட்டிடங்களில் குவிமாடங்கள் அரைக்கோள வடிவில் அல்லாது அதனிலும் உயரம் குறைந்த கோளத் துண்டு வடிவம் கொண்டவையாக இருக்கின்றன. வெங்காய வடிவம் கொண்ட குவிமாடங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. மாஸ்கோவிலுள்ள சென்.பசில் தேவாலயத்திலுள்ள குவிமாடங்கள் இவ்வகைக் குவிமாடங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. இஸ்லாமியக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்களிலும் இவ்வகைக் குவிமாடங்களைக் காண முடியும். கூரை தொடங்கும் இடத்திலிருந்து அமையும் குவிமாடங்களும், இவ்விடத்திலிருந்து உயர்த்தி அமைக்கப்படும் குவிமாடங்களும் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] குவிமாடத்தின் அமைப்பு
குவிமாடத்தின் வளைந்த வடிவமே அதற்கு உறுதியைக் கொடுக்கிறது. இரு பரிமாண அமைப்பான கவானின் உறுதிக்கான அதே தத்துவத்தின் அடிப்படையிலேயே முப் பரிமாண அமைப்பான குவிமாடம் உறுதியுள்ளதாக இருக்கின்றது. கவான் அமைப்பை அதன் நிலைக் குத்து அச்சில் சுழற்றுவதன் மூலம் குவிமாட அமைப்புப் பெறப்படுவதாகக் கொள்ளலாம். தட்டையான கூரை அமைப்புக்களைப் போலன்றி, குவிமாடங்களின் வடிவம் காரணமாக, அவற்றின் எல்லாப் பகுதிகளிலும் அழுத்த விசையே தொழிற்படுவதனால் செங்கற் கட்டுமானத்தின் மூலம் கூடக் குவிமாடங்களை அமைக்க முடிந்தது. ஆரம்பகாலங்களில் குவிமாடக் கூரைகளைத் தாங்குவதற்காகச் சுவர்களை வட்டமாக வளைத்துக் கட்டவேண்டியிருந்தது அல்லது வட்டவடிவமாகத் தூண் நிரைகளை அமைக்க வேண்டியிருந்தது. இதனால் குவிமாடங்களுக்குக் கீழ் அமையும் இடம் அல்லது அறைகளின் தள வடிவம் வட்டமாகவே அமைய வேண்டியிருந்தது.
இப்பிரச்சினைக்குத் தீர்வாக பைசண்டைன் காலப் பகுதியில் புதிய அமைப்பு முறையொன்று அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் மூலம் சதுரமான அறைகள், கூடங்கள் முதலியவற்றுக்கு குவிமாடக் கூரைகளை அமைக்க வழியேற்பட்டது. இத்தகைய அமைப்பு பெண்டெண்டிவ் (pendentive) எனப்படுகிறது.
Many sports stadiums are domed, especially in climates that have widely-variable summer and winter weather. The first such stadium was the Astrodome in Houston, Texas. A major improvement to the domed stadium was accomplished with the construction of SkyDome in Toronto, Ontario, the first domed stadium with a retractable roof.
[தொகு] பிரபலமான குவிமாடங்கள்
கட்டிமுடிக்கப்பட்ட ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளது:
- 27 BC - பந்தியன் (Pantheon), ரோம், இத்தாலி.
- 537 - ஹேகியா சோபியா, கொன்ஸ்டண்டினோப்பிள் (Constantinople), துருக்கி.
- 691 - பாறைக் குவிமாடம் (Dome of the Rock), ஜெரூசலெம்.
- 1312 - சொல்தானியே குவிமாடம் (Dome of Soltaniyeh), ஈரான்.
- 1436 - The Duomo, Florence, Italy.
- 1502, The Tempietto, Rome, Italy.
- 1593 - சென் பீட்டர் பசிலிக்கா, ரோம், இத்தாலி.
- 1616 - நீல மசூதி, இஸ்தான்புல், துருக்கி.
- 1653 - தாஜ் மகால், ஆக்ரா, இந்தியா.
- 1659 - கொல் கும்பாஸ், பிஜப்பூர், கர்நாடகம், இந்தியா
- 1708 - Les Invalides, Paris, France.
- 1708 - சென். போல் தேவாலயம், இலண்டன், இங்கிலாந்து.
- 1749 - The Radcliffe Camera, Oxford, England.
- 1858 - சென். ஐசாக் தேவாலயம், சென். பீட்டர்ஸ்பேர்க், ரஷ்யா.
- 1850s - The United States Capitol, Washington, DC, USA.
- 2000 - The Millennium Dome, London, England.
[தொகு] Xanadu House
The Xanadu House was a home that used the concept of domes heavily in its shape and design. The home was one of the first non-indigenous homes to use curved surfaces throughout the exterior and interior.
See the main Xanadu House article for more information.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- கோளப்பரப்புக் குவிமாடம் (Geodesic dome)
- Cupola
- காங்கிறீற்றுக் குவிமாடம்
- குவிமாடத் தொழில் நுட்பம்
[தொகு] வெளியிணைப்புகள்
- The Dome of Brunelleschi, Florence virtual reality movie and pictures