ஹுமாயூன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நசிருதீன் ஹுமாயூன் (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா ஆகியற்றை ஆண்ட ஒரு முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபர். இவருக்கு அடுத்து நாட்டினை ஆண்டது இவரது மகன் அக்பர் ஆவார்.