New Immissions/Updates:
boundless - educate - edutalab - empatico - es-ebooks - es16 - fr16 - fsfiles - hesperian - solidaria - wikipediaforschools
- wikipediaforschoolses - wikipediaforschoolsfr - wikipediaforschoolspt - worldmap -

See also: Liber Liber - Libro Parlato - Liber Musica  - Manuzio -  Liber Liber ISO Files - Alphabetical Order - Multivolume ZIP Complete Archive - PDF Files - OGG Music Files -

PROJECT GUTENBERG HTML: Volume I - Volume II - Volume III - Volume IV - Volume V - Volume VI - Volume VII - Volume VIII - Volume IX

Ascolta ""Volevo solo fare un audiolibro"" su Spreaker.
CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஆப்கானிஸ்தான் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஆப்கானிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

د افغانستان اسلامي جمهوریت
த அப்ஃகானிசுடான் இசுலாமி ஜொமோரியாட்
جمهوری اسلامی افغانستان
ஜொமோரியே-எ எஸ்லாமி-யே அஃப்கானிஸ்டான்

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு
ஆப்கானிஸ்தானின் கொடி  ஆப்கானிஸ்தானின்  சின்னம்
கொடி சின்னம்
குறிக்கோள்: கிடையாது
நாட்டு வணக்கம்: Soroud-e-Melli
ஆப்கானிஸ்தானின் அமைவிடம்
தலைநகரம் காபூல்
34°31′N 69°08′E
பெரிய நகரம் காபூல்
ஆட்சி மொழி(கள்) பசுடோ,பாரசீகா
அரசு இஸ்லாமிய குடியரசு
 - அதிபர் அமிட் கர்சாய்
 - உப-அதிபர் அகமது சியா மாசூட்
 - பதில் அதிபர் கரிம் கலீலி
விடுதலை ஐ.இ.யிடமிருன்ந்து 
 - பிரகடனம் ஆகஸ்டு 8, 1919 
 - அங்கீகரம் ஆகஸ்டு 19, 1919 
பரப்பளவு  
 - மொத்தம் 652,090 கி.மீ.² (41வது)
  251,772 சதுர மைல் 
 - நீர் (%) தகவல் இல்லை
மக்கள்தொகை  
 - 2005 மதிப்பீடு 29,863,000 (38வது)
 - 1979 கணிப்பீடு 13,051,358
 - அடர்த்தி 46/கிமி² (150வது)
119/சதுர மைல் 
மொ.தே.உ (கொ.ச.வே) 2006 மதிப்பீடு
 - மொத்தம் $31.9 பில்லியன் (91வது)
 - ஆள்வீதம் $1,310 (162வது)
ம.வ.சு (2003) தகவல் இல்லை (நிலையில்லை) – இல்லை
நாணயம் அப்கானி (Af) (AFN)
நேர வலயம் (ஒ.ச.நே.+4:30)
 - கோடை  (ப.சே.நே.) (ஒ.ச.நே.+4:30)
இணைய குறி .af
தொலைபேசி +93

அப்கானிஸ்தான் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு ஆகும். இந்நாடு எல்லாப்புறமும் நிலத்தால் சூழப்பட்ட மத்திய ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் நடு கிழக்கு நாடாகவும் தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்பட்டுவதுண்டு. மேற்கே ஈரானை எல்லையாகவும் தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தானையும் வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்பனவற்றையும் கிழக்கில் சீனாவையும் எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காஷ்மீரூடாக செல்கிறது.

ஆப்கானிஸ்தான் இந்தியாவை வர்த்தகம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மத்திய ஆசியாவுடன் இணைத்த பாதைகளை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1747 முதல் 1973 வரை ஆப்கானிஸ்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது ஆயினும் சில இராணுவ அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றி குடியரசாக அறிவித்தனர்.

1979 ல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. இந்நிகழ்ச்சி ஆப்கான் – சோவியத் யுத்ததிற்கு வழி சமைத்தது. 1989 ல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிய போதிலும் நாட்டில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. சோவியத் படைகளை எதிர்த்துப் போராடிய கரில்லாக் குழுக்கள் தொடர்ந்தும் சோவியத் அரசால் அமைக்கப்பட்ட மத்திய அரசை எதிர்த்துப் போராடத் தொடங்கியது. 1992 ல் இந்த அரசு செயல் இழந்ததுடன் தலீபான் ஆட்சியைக் கைப்பற்றும் வரை இங்கு நிலையான ஒரு ஆட்சியும் இருக்கவில்லை. தலீபானால் 1996 ல் தலைநகரம் காபூல் கைப்பற்றப்பட்டது. 1990 களில் தலீபான் நாட்டின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இவர்கள் கடுமையான இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் நாட்டை ஆட்சி செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது மற்றும் ஆண்கள் தாடியை அழகு படுத்தாமல் அதன் பாட்டுக்கு வளர விட வேண்டும் என்பவற்றைக் குறிப்பிடலாம். 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பின்னர் தலீபான் சர்வதேச தீவிரவாதத்திற்கு உதவுவதாகக் கூறி அமெரிக்கா தலைமையில் தலீபான் ஆட்சி 2001 கடைசியில் ஆப்கானிஸ்தானில் இருந்து நீக்கப்பட்டது.

பொருளடக்கம்

[தொகு] பெயரின் பிண்னனி

ஆப்கானிஸ்தான் என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு ஆப்கானியரின் பூமி (நிலம்) என்பதாகும். ஆஃப்கான் என்ற சொல்லில் இருந்து தற்கால வழக்கு மருவி வந்துள்ளது. பஸ்டுன்ஸ்கள் இதை இஸ்லாமிய காலத்தில் இருந்து இந்த ஆப்கான் என்ற பதத்தை தமக்குப் பயன்படுத்தி வருகின்றனர். டபிள்யு.கே ஃபிரைசர் டெய்லர், எம்.சி ஜில்லட் மற்றும் சில துறை சார் அறிஞர்களின் கருத்துப்படி, "ஆப்கான் என்ற சொல் முதன் முதலாக வரலாற்றில் கி.மு 982 ல் அதூத்-அல்-அலாம் என்ற கிபி 10வது நூற்றாண்டு வரலாற்று நூலில் காணப்படுகின்றது. ” இறுதிச் சொல்லான ஸ்தான் (நாடு, நிலம்) என்பது பாரசீக மொழியில் இருந்து உருவாகியதாகும். ஆப்கான்லாண்ட் (Afghanland) என்ற ஆங்கிலச்சொல் 1781 தொடக்கம் 1925 வரை பாரசீகத்தை ஆண்ட குவாஜார் அரவம்சத்திற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட்டுள்ளது.

ஆயினும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெயர் உச்சரிப்பு முறையானது 18 ம் நூற்றாண்டில் அஹமத் ஷா அப்டாலி புதிய அரசை அமைத்ததில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இது பின்னர் அப்டுர் ரகுமான் கான் என்பவரால் இது அரச ஏற்புடையப் பெயராக அறிவிக்கப்பட்டது. 18 ம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் கொராசன் என்றே அறியப்பட்டது. இன்றைய ஆப்கானிஸ்தானின் பெரும் நிலப்பகுதி கொராசனினையே மையமாகக் கொண்டுள்ளது.

[தொகு] வரலாறு

ஆப்கானிஸ்தான் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கமே முக்கியமான பிரதேசமாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானிஸ்தானில் பல நாகரீகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளது. இது ஐரோப்பா ஆசியாவின் சந்திப்பு புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஆரியர், (Indo-Iranians: Indo-Aryans, Medes, பாரசீகர் போன்றோர்.), கிரேக்கர், Mauryans, Kushans, Hepthalites, அரேபியர், மொங்கோலியர், துருக்கி, பிருத்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்கா வரை பல ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.

கிமு 2000 ம் ஆண்டளவில் மத்திய ஆசியாவைச் சேர்ந்த பல குழுக்கள் ஆப்கானிஸ்தானினுள் குடிபெயர்ந்துள்ளனர். இவ்வாறு வந்து குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆரியர்களாவர். இவர்கள் இந்து – ஐரோப்பிய மொழியைப் பேசியமை குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் ஆரியர்கள் பாரசீகம் மற்றும் இந்தியாவிற்குள்ளும் குடிபெயர்ந்தனர். இவர்கள் குடியேறிய பிரதேசங்கள் ஆரியானா அல்லது ஆரியர்களின் பூமி என அழைக்கப்பட்டது.

கிமு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசிகப் பேரரசான Achaemenid சாம்ராஜம் எனும் சாம்ராஜம் பலமாக இருந்தது. கிமு 300 ம் ஆண்டளவில் மாவீரன் அலெக்சாந்தர் இந்தப் பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டான். கிமு 323 ல் இவரின் மரணத்திற்குப் பின்னர் Seleucids, Bactria, அத்துடன் இந்தியாவின் மெளரியப் பேரரசு போன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மெளரியப் பேரரசினால் இப்பிராந்தியத்தினுள் பௌத்த மதம் பரப்பப்பட்டது.

கிபி முதலாம் நூற்றாண்டில Tocharian Kushans போன்றோர் இப்பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை Parthians, Scythians, மற்றும் Huns போன்ற Eurasian tribes உம் Sassanian போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான Hindu Shahis போன்றோர் இப்பிரதேசத்தை ஆட்சி செய்தனர்.

ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள் ஆப்கானிஸ்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கியது. அரபு சாம்ராஜ்ஜியங்கள் தமது அரசை மேற்கு ஆப்கானிஸ்தானுக்கு 652 ல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதிகளையும் 706-709 வரையான காலப்பகுதியில்ஆக்கிரமித்துக் கொண்டது. பின்னர் இப்பகுதியை என அழைத்ததுடன் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இப்பிரதேசத்தில் பல சாம்ராஜ்ஜியங்கள் உருப்பெற்றன. எ-கா Ghaznavid Empire (962-1151) என்ற பேரரசு துருக்கியைச் சேர்ந்த Yamin ul-Dawlah Mahmud என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. மேற்கூறிய பேரரசு Ghorid Empire (1151-1219), என்ற அரசினால் வெற்றி கொள்ளப்பட்டது.

1299 ல் இப்பிராந்தியம் செங்கிஸ் கான் என்பவனின் கொடுங்கோல் ஆட்சிக்குட்பட்டது. இவன் மொங்கோலிய இனத்தைச் சேர்ந்தவன் ஆவான். 1504 ல் பார்பர் என்ற ஆட்சியாளனினால் காபூலை மையமாகக் கொண்டு முகலாயப் பேரரசு ஸ்தாபிக்கப்பட்டது. 17 ம் நூற்றாண்டு அளவில் பாரசீகத்தின் Safavids ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

18 ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் Ghaznavid Khan Nasher என்பவரின் தலைமையின் கீழ் பாரசீகத்திற்கு எதிரான புரட்சி ஆப்கானிஸ்தானில் வெடித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து பாரசீகர்கள் துரத்தப்பட்டதுடன், கிழக்கு ஈரான் பிரதேசத்தையும் 1719-1729 வரையான காலம் ஆப்கானியர்கள் ஆண்டனர். 1729 ல் பாரசீகத்தின் நதீர் ஷா என்பவன் ஆப்கானியரை தோற்கடித்தான். 1738 ல் நதீர் ஷா கந்தகாரை வெற்றி கொள்வதுடன் அதே வருடத்தில் காபூல், லாகூர், Ghazni போன்ற பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொள்கின்றான். 1747 ல் நதீர் ஷாவின் மரணம் அடைகின்றான். 1747 ல் ஆப்கான்/Pashtuns ஆகியோர் கந்தகாரில் கூடி அஹமது ஷா என்பவனை மன்னனாக முடி சூட்டிவிக்கின்றனர். இவர் தனது கடைசிப் பெயரை டுரியோ (என்கது முத்துக்களின் முத்து என்று பொருள்படும்) என மாற்றிக்கொண்டான். டுரானி பேரரசு காலத்துடனே இன்று ஆப்கானிஸ்தான் என்று அறியப்படும் பிரதேசம் உருவாகின்றது. 19 ம் நூற்றாண்டு அளவில் இந்தப்பிரதேசம் பல்வேறு உட்குளப்பங்களுக்கு உள்ளானது. பாரசீகர் மற்றும் சீக்கியருடனான பிரைச்சனைகள் காரணமாக சுமார் ஒரு நூற்றாண்டு மட்டுமே இந்த பேரரசு நிலைத்து இருந்தது. ஆயினும் பிருத்தானியரின் காலப்பகுதிவரை ஆப்கானின் எல்லைகள் இன்று போன்று வரையறுக்கப்பட முடியாமல் இருந்தது.

1751 ல் அகமட் ஷா டுறானி இன்றய ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், மற்றும் ஈரானின் கோரசன் பிரதேசம், டெல்லி போன்ற பகுதிகளை ஆண்டு கொண்டு இருந்தான். 1772 அக்டோபரில் அகமட் ஷா, மருஃப் இல் ஓய்வு எடுத்ததுடன் அமைதியாக மரணம் அடைகின்றார். இவருக்குப் பின்னர் இவரது மகன் டைமூர் ஷா டுரானி ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றான். 1776 இவன் தனது ஆட்சிக்காலத்தில் கந்தகாரில் இருந்த தலைநகரத்தை காபூலுக்கு மாற்றினான். தைமூர் 1793 ல் மரணம் அடைகின்றான். இவருக்குப் பின்னர் இவரது மகனான சமன் ஷா டுறானி ஆட்சியை ஏற்கின்றான்.

19 ம் நூற்றாண்டுப் பகுதியில் அங்லோ – ஆப்கானிய யுத்ததின் பின்னரும் பராக்சாய் சாம்பிராஜ்யத்தின் வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதி ஐக்கிய இராச்சியத்திடம் போயிருந்தது. 1919 ல் அரசர் அமனுல்லா கான் அரியணை ஏறும் வரை ஐக்கிய இராச்சியம் ஆப்கானிஸ்தானில் பெரும் செல்வாக்குத் செலுத்தியது. இவரின் பின்னர் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது. இதன் போது பிருத்தானிய இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் முறுகலான உறவே நிலவியது.

சாகீர் ஷா ஆப்கானிஸ்தானின் இறுதி மன்னன் என்பதுடன் இளமையானவர், நீண்டகாலம் ஆட்சி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
சாகீர் ஷா ஆப்கானிஸ்தானின் இறுதி மன்னன் என்பதுடன் இளமையானவர், நீண்டகாலம் ஆட்சி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆப்கானிஸ்தானின் நீண்ட உறுதியான காலப்பகுதி என்றால் அது 1933 தொடக்கம் 1973 வரையான அரசர் சாகிர் ஷாவின் ஆட்சிக்காலமாகும். எனினும் 1973 ல் சாகிர் ஷாவின் மைத்துணன் சர்தார் Daoud கான் புரட்சிமூலம் பதவியைக் கைப்பற்றிக்கொள்கின்றான். ஆயினும் Daoud கான்னும் அவரது மொத்த குடும்பமும் 1978 கொலை செய்யப்பட்டர். இக்கொலை இடதுசாரிகளான People's Democratic Party of Afghanistan ஆல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது இக்குழுவினர் இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்கின்றனர். இது (Great Saur Revolution) மாபெரும் சார் புரட்சி என்று அறியப்படுகின்றது.

1973 முதல் 1978 வரை கான் ஆப்கானியக் குடியரசின் அதிபராவார்.
1973 முதல் 1978 வரை கான் ஆப்கானியக் குடியரசின் அதிபராவார்.

இந்த இடது சாரி அரசும் உட்பிரைச்சனை, எதிர்ப்புகள் என்று பல்வேறு பிரைச்சனைகளை எதிர்கொண்டது. ரஸ்யா – அமெரிக்காவிற்கிடையிலான பனி யுத்தத்தில் ஆப்கானிஸ்தானும் அகப்பட்டுக்கொண்டது. 1979 ல் ஜிம்மி காட்டர் தலைமையிலான அமெரிக்க அரசு அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski உம் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முகாஜுதீன்களுக்கு உதவிஅளித்தது. ஆயினும் உள்ளூரில் சமவுடமையைக் காப்பாற்ற சோவியத் ரசியா ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டுக்கொண்டது. இதன் படி சுமார் 110,000 முதல் 150,000 வரையான சோவியத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுள் நுழைந்தன. இவர்களுக்கு சுமார் 100,000 வரையான இடதுசாரி ஆப்கானிய படைகள் ஆதரவு வழங்கின. சோவியத் படைகளின் வருகையை அடுத்து சுமார் 5 மில்லியன் ஆப்கானிய அகதிகள் பாக்கிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். 3 மில்லியனுக்கு அதிகமானோர் பாக்கிஸ்தானிலும், ஒரு மில்லியன் அளவில் ஈரானிலும் பல்வேறு நாடுகளிலும் நிரந்தரமாகத் தங்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பல்வேறு சர்வதேச அழுத்தங்களினாலும் சுமார் 15,000 துருப்புக்களை முகாஜுதீன்களுடனான யுத்தத்தில் இழந்ததனாலும் சோவியத் துருப்புகள் 10 ஆண்டுகளின் பின்னர் 1989 ல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டது அமெரிக்கர்களால் பெரிய வெற்றியாகக் கருதப் பட்டது. சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப் பட்டதும் அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் மீதான நாட்டம் குறைந்தது. அமெரிக்கா போரினால் சிதலமான ஆப்கானிஸ்தானை சீரமைக்க உதவவில்லை. சோவியத் ரசியா தொடர்ந்தும் அதிபர் நஜிபுல்லாவிற்கு தமது ஆதரவை வழங்கியது ஆயினும் 1992 ல் இவர் வீழ்த்தப்பட்டார். சோவியத் படைகளின் பிரசன்னம் இன்மை இந்த இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கும் போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தது.

பல சிறுபாண்மையினரும், புத்திஜீவிகளும் யுத்தத்தின் பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டுவெளியேறினர். சோவியத் வெளியேற்றத்தின் பின்னரும் முகாஜுதீன்களின் பல உட்பிரிவுகளிற்கிடையில் யுத்தங்கள் முளலாயின. இதன் உச்சக்கட்டமாக 1994 ல் 10,000 பொதுமக்கள் காபூலில் கொல்லப்பட்டனர். இக்காலகட்டத்தில் தலீபான் அமைபப்பு எழுச்சி பெற்றது. இவர்கள் பெரும்பாலும் ஹெல்மான்ட், கந்தகார் பிரதேசத்தைச் சோந்த Pashtuns ஆவார்.

தலீபான் அரசியல் – மதம் சார் சக்தியை உருவாக்கியது. இது 1996 ல் காபூலை கைப்பற்றிக்கொண்டது. 2000 ம் ஆண்டின் முடிவில் தலீபான் நாட்டின் 95% மான நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதேவேளை வடக்கு முண்ணனி எனும் அமைப்பு வடகிழக்கு மாகானமான படக்ஷான்இல் நிலையூன்றி இருந்தது. தலீபான் ஷரியா எனும் முஸ்லிம் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தியதுடன் பின்னர் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தலீபான் அல்-கைடா தீவிரவாதியான ஒசாமா பின் லேடன்னை பாதுகாத்தனர்.

தலீபானின் ஏழு வருட ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுநத்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது தலீபான் அதிகளவான மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வது தடைசெய்யப்பட்டது, பெண்கள் பாடசாலையோ, பல்கலைக்கழகமோ செல்வது தடைசெய்யப்பட்டது போன்றவையைக் குறிப்பிடலாம். இதை எதி்ர்த்தவர்கள் அடிக்கடி கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுததவர்களின் கைகள் வெட்டி அகற்றப் பட்டவை போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தலீபான் ஆட்சியின் நல்ல நிகழ்வு எனும் போது 2001 ம் ஆண்டு அளவில் ஆப்கானின் ஓபியம் எனும் போதைப் பொருள் தயாரிப்பு முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்லிற்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-கைடா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கான் மீது நடத்தியது. தலீபானை தோற்கடிக்க வடக்கு முண்ணியுடன் அமெரிக்கா நட்புறவு பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

2001 டிசம்பர் ல் ஆப்கானின் பெரும்பாலான தலைவர்கள் ஜேர்மனியின் பொன் நகரின் கூடி ஆராய்ந்து ஒரு இடைக்கால அரசை அமைக்க இணங்கினர். இதன் போது கந்தகார் நகரைச் சோந்தவரும், பாஸ்துன் இனத்தவருமான ஹமீட் ஹர்சாய் ஆப்கானிய இடைக்கால அரசின் இக்குனராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர்
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர்

2002 ல் தேசிய ரீதியாக நடைபெற்ற லோய ஜர்கா வின் பின்னர், கர்சாய் ஏனைய பிரதிநிதிகளால் இடைக்கால – அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2003 ல் நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2004 ல் நடைபெற்ற தேசிய ரீதியான தேர்தலின் மூலம் ஹமீட் கர்சாய் புதிய அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். செப்டம்பர் 2005 ல் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. 1973ம் ஆண்டுக்குப்பின்னர் சுதந்திரமாகத் தெரிவுசெய்யப்பட்ட சட்டவாக்கசபை இதுவாகும். இதில் பெண்கள் வாக்களித்தமை, பெண்கள் தேர்தலில் போட்டியிட்டமை, தெரிவுசெய்யப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்க விடங்களாகும்.

நாடு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதும் கணிசமான பல பிரைச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது. உதாரணமாக வறுமை, தரம் குறைந்த உட்கட்டுமான வசதிகள், மிதிவெடிகள் அதிக செறிவில் உள்ளமை, பொப்பி, ஓபியம் வியாபாரம் போன்றன. இதைவிட மிஞ்சியிருக்கும் அல்-கைடா உறுப்பினர்கள் மற்றும் தலீபான் போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. மேலும் வடக்கில் சில இராணுவத் தலைவர்கள் தொடர்ந்தும் பிரைச்சனை கொடுத்து வருகின்றனர்.

[தொகு] அரசாங்கமும் கொள்கைகளும்

ஆப்கானிஸ்தானின் அரசியலானது வரலாற்று ரீதியாக பல்வேறு பட்ட குளப்பங்கள் நிறைந்து காணப்பட்டது. உதாரணமாக பல்வேறு பட்ட அரசியல் பதவிச் சண்டைகள், இராணுவப் புரட்சிகள், ஸ்திரமற்ற ஆட்சிஅதிகாரமாற்றம் என்பனவாகும். இந்த நாடு இராணுவ ஆட்சி, அரசாட்சி, குடியரசு, சமவுடமை அரசு என்று பல்வேறு பட்ட ஆட்சி முறைகளில் கீழ் இருந்துள்ளது. 2003 ம் ஆண்டில் அரசியல் சட்டம் லோயா ஜிர்காவால் மீள் அமைக்கப்பட்டது. இதன் படி ஆப்கானிஸ்தான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக மாற்றப்பட்டது. இதில் மூன்று பிரதான பிரிவுகள் உள்ளன (நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை).

ஆப்கானின் தற்போதய அதிபராக ஹமிட் கர்சாய் உள்ளார். இவர் 2004 அக்டோபர்இல் தெரிவுசெய்யப்பட்டார். இவர் நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்த எடுத்த நடவடிக்கைகள், தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தியமை போன்ற காரணங்களுக்காகப் பாராட்டப்பட்டாலும் இன்னமும் அடக்கப்படாமல் உள்ள பழைய இராணவத் தலைமைகளால் சிறிது கெட்ட பெயரும் உள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றம் 2005 ல் தெரிவுசெய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்டவர்களில் முன்னாள் முகாஜுதீன்கள், தலீபான்கள், சமவுடமைவாதிகள், மறுசீரமைப்பாளர்கள், மற்றும் இஸ்லாமிய பழைமைவாதிகள் உள்ளடங்குவர். 28% மானவர்கள் பெண்கள். இதன் மூலம் தலீபான் ஆட்சியில் இருந்த பெண்களுக்கு எதிரான அடக்குமுறை குறைந்துள்ளதுடன், அதிகளவு பெண்களை நாடாளுமன்றத்தில் கொண்ட நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று.

அதியுச்ச நீதிமன்றம் (Supreme Court of Afghanistan) தற்போது தலைமை நீதிபதி அப்துல் சலாம் அசினியால் நிர்வகிக்கப்படுகின்றது. இவர் முன்னாள் பல்கலைக்கழகப் பேராசிரியரும் அதிபரின் சட்ட ஆலோசகரும் ஆவார். முன்பிருந்த நீதி மன்றம் இடைக்கால அரசின் போது நியமணம் செய்யப்பட்டது ஆயினும் இதில் பைசல் அஹமட் ஷின்வாரி போன்ற பழமைவாதிகள் இருந்தனர். நீதிமன்றம் பல்வேறு சட்டங்களை உருவாக்கியது உதாரணமாக கேபிள் தொலைக்காட்சியைத் தடைசெய்தமை, பெண்களின் உரிமைகளை பறிக்க முயன்றமை, மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அதின் அதிகார வரம்புக்கப்பால் பாவிக்க முயன்றவை என்பவற்றைக் கூறலாம். ஆயினும் தற்போதைய நீதிமன்றம் சரியான நபர்களால் வழிநடத்தப்படுகின்றது.

[தொகு] நிர்வாக அலகுகள்

ஆப்கானிஸ்தான் 31 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணங்கள் மேலும் மாவட்டங்கள் என்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

[தொகு] பொருளாதாரம்

ஆப்கானிஸ்தான் மிகவறுமையான நாடாகும். உலகிலேயே மிகவும் பின்தங்கிய அபிவிருத்தி அடையாத நாடாகும். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பொருளாதாரம் 1979 தொடக்கம் இருந்த அரசில் ஸ்திரமின்மையால் பலமாகப் பாதிக்கப்பட்டது.

நாட்டில் பெருளாதார ரீதியாக செயல்லூக்கத்துடன் 11 மில்லியன் (மொத்தம் 29 மில்லியன் மக்கள் உள்ளனர்) மக்கள் உள்ளதாக 2002 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்லுகின்றன. ஆயினும் வேலையில்லா வீதம் பற்றிய உத்தியோக பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை, ஆயினும் இது மிக உயர்வு என்பதே உண்மை. தொலிழ் சார் பயிற்சி இல்லாத இளம் சமுதாயம் கிட்டத்தட்ட 3 மில்லியன் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இது ஒவ்வொரு வருடமும் சுமார் 300,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்கானியப் மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி ஓபியம், மோபைன், ஹாசிஸ் போன்ற போதைப் பொருள் மூலமே கிடைக்கின்றது.

மறுபக்கம் சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்புவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆப்கானிய இடைக்கால அரசு ஜேர்மன் பொன் நகரில் டிசம்பர் 2001 ல் உருவாகியபின் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உறுதியளிக்கப்பட்டது. இதைவிட 10.5 பில்லியன் அமெரிக் டொலர்கள் லண்டன் மாநாட்டின் மூலம் 2006 ல் ஆப்கானுக்கு கிடைத்தது. அபிவிருத்தியில் கல்வி, சுகாதாரம், நிர்வாகத் திறன் மேம்பாடு, பயர்ச்செய்கைத் துறை மேம்பாடு, வீதிகள் மீளாக்கம், சக்தி மற்றும் தொலைத் தொர்பு இணைப்புகள் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

2004 ம் ஆண்டுக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின் படி, தற்போதைய அபிவிருத்திகள் இரண்டு பிரதான கிளைகளைக் கொண்டது. இதன்படி முதலில் அவசிய உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்தலும் இரண்டாவதாக நவீன பொது கட்டமைப்பை (Modern Public Sector) ஏற்படுத்துவது. 2006 ல் இரண்டு அமெரிக்க கம்பனிகள் 1.4 பில்லியன் பெறுமதியான வீதிகளை மீளமைத்தல், சக்தி இணைப்புகள், நீர் வழங்கல் போன்ற செயற்பாட்டிற்காக தொழில் ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக்கொண்டன.

தற்போதைய பொருளாதார மீட்சிக்கு முக்கிய காரணம் அண்டைய நாடுகளிலும், மேற்கிலும் இருந்து மீண்டு வந்த 4 மில்லியன் அகதிகளாவர். இவர்கள் தம்முடன் புதிய சக்தி, தொழில்களை ஆரம்பித்தமை என்பனவாகும். அத்துடன் சுமார் 2-3 பில்லியன் வரையான சர்வதேச உதவிகள் வருடாந்தம் கிடைத்து வருவதும் பொருளாதாரத்திற்கு சக்தி வழங்குவதாக உள்ளது. தனியார் துறையும் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். டுபாயில் வசித்துவரும் அப்கானிய குடும்பம் ஒன்று அப்கானில் ஒரு கொக்க – கோலா போத்தல் நிரப்பும் நிலையத்தை 25 மில்லியன் செலவில் நிர்மாணித்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

நாட்டின் திறைசேரி பெரும்பாலும் வெளிநாட்டு உதவிகளை நம்பியெ உள்ளது. சிறிய பகுதியான 15% வரையே உள்ளுர் அரசினால் வரவுசெலவு திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றது. மீதி ஐக்கிய நாடுகள் சபையின் மூலமும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றது. அரசு 2003 ல் $350 மில்லியன் வரவு செலவுத் திட்டமும், 2004 ல் $550 மில்லியன் அளவிலான வரவு செலவுத் திட்டமும் போட்டது. அந்நியச் செலாவணி $500 மில்லியன் அளவாகும், இது பெரும்பாலும் சுங்க வரிமூலமே அறவிடப் படுகின்றது.

2002 தொடக்கம் பணவீக்கம் பெரும் பிரைச்சனையாக உள்ளது. இருந்தாலும், பழைய 1000 ஆப்கானிக்குப் பதிலாக ஒரு புதிய ஆப்கானி என்ற பண முறைமையை அமுல் படுத்தியதன் மூலம் ஓரளவு நிலையான தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் குறிகாட்டிகள் நிலையான தன்மையைக் காட்டியதுடன், 2003 ல் சிறிதளவான வளர்ச்சியையும் காட்டியது.

ஆப்கானிய அரசும், சர்வதேச உதவி வழங்குவோரும் அடிப்படைத் தேவைகள், உட்கட்டுமான அபிவிருத்தி, கல்வி, வீடு, மற்றும் பொருளாதார மீளமைப்பு என்பவற்றில் அதிகளவு அக்கறை காட்டிவருகின்றனர். நிதியியல் துறையைக் கட்டி யெழுப்புவதற்கான முயற்சிகள் இது வரை சிறப்பாகவே நடைபெற்றுவருகின்றன. பணமானது நாட்டினுள்ளேயும் வெளியேயும் உத்தியோக பூர்வ வங்கிகள் மூலம் பரிமாற்றக் கூடியதாக உள்ளது. 2003 க்குப்பின்னர் சுமார் பதின்நான்கு புதிய வங்கிகள் இங்கே திறக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, ஏஐபி வங்கி, காபூல் வங்கி, அசீசீ வங்கி என்பன அடங்கும். தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வண்ணம் வரி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய உதவியுடன் நடக்கும் சில தனியார் முதலீட்டுச் செயற்திட்டங்களும் நாட்டை நல்வழியில் இட்டுச்செல்கின்றன. இதில் கலாநிதி. ஹிசாம் என். அஷ்கோரி என்பவரால் நடத்தப்படும் விளக்குகளின் நகரம் அபிவிருத்தித் திட்டம் பிரபலமானதாகும். இதன் மூலம் காபூல் நகரம் வர்த்தக, வரலாற்று, கலாச்சார அபிவிருத்தியை அடையும் என்று எதிர்பார்க்கப்டுகி்ன்றது. இதன் மூலம் ஆப்கான் தேசிய நூதன சாலையும் அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படியான மாற்றங்கள் எதிர்காலத்தில் ஆப்கானிய மக்களுக்கு சிறப்பான வாழ்க்கை முறையைத் தேடித்தரும் என்பது நிஜமானாலும் தற்போது மக்கள் உணவுத் தட்டுப்பாடு, உடையின்மை, வீட்டுப்பிரைச்சனை, மருத்துவ வசதி போன்ற பிரைச்சனைகளால் அல்லல் படுகின்றனர். இவை யாவும் தொடர்ந்த யுத்தங்கள்மற்றும் அரசியல் ஸ்திரம் இன்மையால் ஏற்பட்ட பிரைச்சனைகளாகும். மத்திய அரசு சுங்க வரியினை முழுமையாக பெற முடிவதில்லை இதற்கு பழைய இராணுவத்தலைமைகளே காரணமாகும். மோசடி லஞ்சம் என்பன நாட்டில் புரையோடிப்போய் உள்ளது. அத்துடன் மத்திய அதிகாரம் இன்னமும் தெற்கு, தென்-மேற்குப் பகுதிகளில் நிலைபெறவில்லை.

இந்த வேளையில் ஆப்கானிஸ்தானுக்குச் ஆறுதல் தரும் செய்தி என்னவெனில் அது தற்போது உள்ள வறுமை போன்ற பிரைச்சனையில் இருந்து விரைவாக வெளிவரலாம் என்பதே. இதற்குக் காரணம், நாட்டில் பல்வேறு இயற்கை வளங்கள் நிறைந்து கிடைப்பதே. அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் ஆப்கானிய அமைச்சின் தகவல்ப்படி 15.6 ரில்லியன் கன அடி இயற்கை வாயு, 1.6 பில்லியன் எண்ணெய், 1,325 மில்லியன் பரல் இயற்கை வாயுத திரவம் என்பன உள்ளது. இது ஆப்கானிய மீள்கட்டுமானப் பணிகளில் ஒரு திருப்பு முனையாக அமையும். சக்தி மூலங்களின் ஏற்றுமதியானது நாட்டிற்கு பெருமளவு இலாபத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் உட்கட்டமப்பை நவீன மயப்படுத்த மற்றும் மக்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்த சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. வேறு சில மூலங்கள் நாட்டில் தங்கம், செம்பு, இரும்பு போன்ற கணிய வளங்கள் உள்ளதாகக் கூறுகின்றன.

[தொகு] மக்களின் பரம்பல் பற்றிய விபரம்

நாட்டின் சனத்தொகை பல்வேறு இனக்குளுக்களாக உள்ளனர். நாட்டில் முறையான சனத்தொகைக் கணக்கெடுப்பு பல தசாப்தங்களாக நடத்தப்படவில்லை. ஆகவே ஆப்கான் மக்கள் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தோராயமாக மதிப்பிட்ட எண்ணிக்கையாகும்.

2006 ல் பிபிசி செய்தி தாபனம் சிஐஏ புத்தகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை என்பற்றில் இருந்து மக்கள் தொகைக் கணக்கை கீழே உள்ள வரைபில் உள்ளமாதிரி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்டுகின்றது.

சிஐஏ புத்தகத்தின் தகவலின் படி கீழுள்ளவாறு பரம்பல் உள்ளது.

கலைக்களஞ்சியம் பிருட்டானிகா பின்வருமாறு சிறிது வேறுபட்ட தகவலைத் தருகின்றது.

  • 49% Pashtun
  • 18% Tajik
  • 9% Hazara
  • 8% Uzbek
  • 4% Aimak
  • 3% Turkmen
  • 9% other

1960 தொடக்கம் 1980 வரையான காலப்பகுதியில் எடுத்த உத்தியோக பூர்வ சனத்தொகைக் கணக்கெடுப்பு பின்வரும் முடிவைக்காட்டுகின்றது. இது இரானிக்கா கலைக்களஞ்சியத்தின் முடிவு பின்வருமாறு.

  • 36.4% Pashtun
  • 33.6% Tajik (including Farsiwan and Qezelbash)
  • 8.0% Hazara
  • 8.0% Uzbek
  • 3.2% Aimak
  • 1.6% Baloch
  • 9.2% other

[தொகு] மொழிகள்

இந்து-ஐரோப்பிய மொழிகளானதும் இராணிய மொழிக்குடும்பத்தின் உபபகுதியுமான பாஸ்டோ 35% உம் பாரசீகமொழி (டாரி) 50% உம் பேசப்படுவதாக சி.ஐ.ஏ தரவுப்புத்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைவிட துருக்கி மொழிகளான (உஸ்பெகி, டெர்க்மெனி) 9% ம் அதைவி 30 சிறுபாண்மை மொழிகள் (பிரதானமாக பலோச்சி, பசானி, நுரிஸ்டானி) 4% வீதமும் பேசப்படுகின்றது. இரு மொழி பேசும் தன்மையை இங்கே அவதானிக்கலாம்.

[தொகு] மதங்கள்

மதரீதியாக, 99% மானவர்கள் இஸ்லாமியர் ஆவர், கிட்டத்தட்ட 74-89 வீதம் வரையானோர் சுன்னி முஸ்லிம்களாகவும் 9-25 வீதம் வரையானோர் ஷியா முஸ்லிம்களாகவும் உள்ளனர். அங்கு கிட்டத்தட்ட 150,000 இந்துக்களும் எண்ணிக்கை தெரியாத அளவில் சிங் இனத்தவரும் காபூல், கந்தகார், காஸ்சி மற்றும் ஜலாலாபாத் போன்ற நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு சிறிங அளவில் யூத இனத்தவர் வாழ்ந்து வந்த போதும் ரசிய ஆக்கரமிப்புக்குப்பின்னர் 1979 ல் நாட்டைவிட்டு வெளியேறினர். ஒரு தனிநபரான சப்லோன் சிமின்டோவ் மீதமாக நாட்டில் உள்ளார்.

[தொகு] பெரிய நகரங்கள்

ஒரு மில்லியனுக்கு அதிகமான சனத்தொகை உள்ள ஒரே நகரம் தலைநகரமான காபூல் ஆகும். ஏனைய பிரதான நகரங்கள் சனத்தொகை ஒழுங்கில் பின்வருமாறு. கந்தகார், ஹீரட், மசாரி ஷரிஃப், ஜலாலாபாத், காஸ்னி மற்றும் குண்டுஸ்.

[தொகு] கலாச்சாரம்

ஆப்கானியர் தமது மதம், நாடு, பழமை, முன்னோர், இவற்றிற்கு மேல் அவர்களது சுநத்திரம் போன்றவற்றில் பெருமைகொள்கின்றனர். இந்த நாட்டு மக்களின் தனிப்பட்ட நடத்தை காரணமாகவே வெளிநாட்டு சக்திகளால் நாட்டை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை.

ஆப்கானிஸ்தான் குளப்மான வரலாற்றைக் கொண்டுள்ளதுடன் அது தற்போது அங்குள்ள கலாச்சாரங்கள், அல்லது பல்வேறு வடிவிலுள்ள மொழிகள் மற்றும் நினைவுச்சின்னங்களில் எஞ்சி உள்ளது. ஆயினும் நாட்டின் பெருமளவிலான நினைவுச் சின்னங்கள் இங்கு நடந்த யுத்தங்களினால் அழிந்து போய் உள்ளது. பாம்யன் மாகாணத்தில் இருந்த இரு புத்தர் சிலைகள் தலீபான்களினால் அழிக்கப்பட்டது. கந்தகார், ஹேரட், காஸ்னி போன்ற நகரங்களில் கலாச்சாரச் சுவடுகளைக்காணலாம். முகம்மது நபி அவர்களால் அணியப்பட்ட மேலாடை ஒன்று இன்றும் கந்தகார் நகரில் உள்ள கால்கா ஷரிஃபாவில் உள்ளதாக நம்பப்படுகின்றது. இதைவிட ஹரி ருட் பள்ளத்தாக்கில் உள்ள மின்னரட் ஒப் ஜாம் யுனெஸ்கோவினால் உலக முக்கிய கலாச்சார இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானியர் பெரும்பகுதியினர் குதிரை ஓட்டிகளாக இருப்பதுடன் இந்த நாட்டின் தேசிய விளையாட்டு புஸ்காசி, இது ஒரு வகையில் போலோ விளையாட்டை ஒத்ததாகும். ஆயினும் பந்துக்குப் பதிலாக ஒரு இறந்த ஆட்டின் உடலை வைத்து விளையாடுவர்.

கல்வியறிவு வீதம் மிகக் குறைவாக இருந்த போதும் பாரசீக கவிதைகள் நாட்டின் கலாச்சாரத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. கவிதையானது ஈரானிலும் ஆப்கானிலும் கல்வியின் தூண்களாக இருந்துள்ளன. பாரசீகத்தின் கலாச்சாரங்களின் தாக்கம் இன்றும் ஆப்கானில் தொடர்வதை அவதானிக்கலாம். “முஸ்ரா எரா” என்ற பெயரில் அழைக்கப்படும் கவிதைப்போட்டி நாட்டில் மிக சாதாரணமாக நடைபெறுவதாகும். கிட்டத்தட்ட அனைத்து வீடுகளும் தம் வீட்டில் தாம் வாசிக்காவிட்டாலும் ஏதாவது ஒரு வகையான கவிதைத் தொகுதிகளை வைத்திருப்பர்.

டாரி கிழக்கில் பேசப்படும் பாரசீக மொழியின் வித்தியாசமான ஒரு பேச்சு வழக்காகும்.

இன்றய ஆப்கானிஸ்தானும் அன்று கோரசன் என்று அழைக்கப்பட்டதுமான இடத்தில் 10ம் நூற்றாண்டு தொடக்கம் 15ம் நூற்றாண்டு வரை பல அறிஞர்கள் தோன்றினர். இவர்கள் மொழி, இயற்கை விஞ்ஞாணம், மருத்துவம், சமயம், வானியல் போன்றவற்றில் தேர்ச்சி உடையவர்களாக இருந்துள்ளனர். உதாரணமாக மெளலானா றூமி என்பவரைக் கூறலாம். இவர் 13 ம் நூற்றாண்டில் பால்கியில் பிறந்ததுடன் அங்கேயே கல்வியைப் பெற்றுக்கொண்டார். பின்னர் இவர் கொன்யா (இன்றய துருக்கியில் உள்ள இடம்.) என்ற பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்தார். சானாயி காஸ்வானி (12ம் நூற்றாண்டு, பூர்வீகம காஸனி மாகாணம்), ஜாமி ஓ ஹாரத்(15ம் நூற்றாண்டு, பூர்வீகம் Jam-e-Herat, மேற்கு ஆப்கானிஸ்தான்), Nizām ud-Dīn Alī Sher Navā'ī, (15ம் நூற்றாண்டு, ஹேரட் மாகாணம்). இவர்களில் பெரும்பாலானார் பாரசீகர் ஆவர் (டாஜிக்) இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவதுடன் இவர்களின் இனத்தைச் சேர்ந்தவர்களே நாட்டில் இரண்டாவது அதிகமான இனத்தவராக இருந்து வருகின்றனர். இவர்களை விட போன்ற பாரசீக எழுத்தாளர்கள் Ustad Betab, Khalilullah Khalili,[51] Sufi Ghulam Nabi Ashqari, Qahar Asey, Parwin Pazwak ஈரான் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளிலும் ஓரளவு அறியப்பட்டவர்களாவர். 2003 ல் காலிட் ஹொசெனி என்பவர் பதிப்பித்த புத்தகம் 1930 ல் இருந்து இன்றய தினம்வரையான, ஆப்கானிஸ்தானில் நடந்த வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

கவிஞர்கள், எழுத்தாளர்களைவிட பல பாரசீக விஞ்ஞாணிகளின் பூர்வீகம் பாரசீகமாக இருந்துள்ளது. இவர்களுள் குறிப்பிடத்தக்கவரான அவிசினாவின் (அபு அலி ஹூசைன் இபின் சினா) பால்க் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இபுன் சினா, இஸ்பகானில் மருத்துவக்கல்லூரி அமைத்தவரும், இன்ற நவீன மருத்துவததின் தந்தையரில் ஒருவருமானவர். தற்போது பிரபலமான ஆங்கிலப் புத்தகங்களான Noah Gordon இன் The Physician வில் கூட இவர் பற்றிய தகவல்களைக்காணலாம். இந்தப் புத்தகம் இப்போது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தலீபான்கள் காபூலைக் கைப்பற்ற முன்னர் அந்த நகரில் பல இசையறிஞர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாரம்பரிய இசையிலும், நவீன இசையிலும் தேர்ந்து விளங்கினர்.

பழங்குடியினரின் முறைப்படி ஆண்கள் அவர்களது இனத் தலைவருக்கு மிகவும் கட்டுப்பட்டவராக உள்ளனர். தலைவர் கோரினால் ஆயுதங்களை ஏந்த வேண்டி கடப்பாடும் அவர்களுக்கு இருக்கின்றது.

[தொகு] உட்கட்டுமானம்

[தொகு] தொடர்பாடலும் தொழில் நுட்பமும்

ஆப்கானிஸ்தான் தொடர்பாடலில் வேகமாக வளர்ந்து வருகின்றது. இணையம், வானொலி, தொலைக்காட்சி சேவைகள் என்பன விரிவடைந்து வருகின்றது. ஆப்கானின் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களான ஆப்கான் வயர்லெஸ், றோசான், அறீபா போன்றன செல்லிடத் தொலை பேசிப் பாவனையை அதிகளவில் அதிகரிக்கச் செய்துள்ளன. 2006ல் ஆப்கானிய அரசு ZTE என்ற நிறுவனத்துடன் 64.5 அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை செய்ததன் மூலம் நாடு முழுவதும் பரந்து பட்டதான ஒளியிழைத் தொடர்பாடல் வலையமைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

  • ஆப்கானிய உள்நாட்டு தொலைக்காட்சி சேவைகள்.
    • ஐனா டிவி
    • அரியானா டிவி
    • அரியானா ஆப்கானிஸ்தான் டிவி
    • லாமர் டிவி
    • ஷாம்ஷாட் டிவி
    • டோலோ டிவி

[தொகு] போக்குவரத்து

ஆப்கானின் வர்த்த நோக்கிலான விமான சேவை நிறுவனமான அரியானா ஆப்கான் எயார் லைன்ஸ் இப்போது லண்டன், ஹீத்ரோவ், பிராங்புர்ட், மட்ரிட், ரோம், டுபாய் மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களுக்கு சேவைகளை வழங்குகின்றது. இது காபூல் மற்றும் ஹேரட் ஆகிய நகரங்களில் இருந்து நடைபெறுகின்றது. ஆப்கானில் டொயோட்டா, லாண்ட் ரோவர், பி.எம்.டபிள்யு மற்றும் ஹயுண்டாய் போன்ற வாகனங்கள் பாவனைக்கு வரத்தொடங்கியுள்ளன. அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பாவி்த்த வாகனங்கள் பெருமளவில் இறக்குமதிசெய்து பயன்படுத்தப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் தற்கால நவீன தொழில் நுட்ப வசதிகளை அனுபவிக்கா விட்டாலும் அந்த இலக்கு நோக்கி விரைவாகப் பயனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

[தொகு] கல்வி

ஆப்கானிஸ்தானின் 7000 பாடசாலைகளில் 30% வீதமான பாடசாலைகள் இரண்டு தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சேதமடைந்ததாக 2003 காலப்பகுதியில் அறியப்பட்டுள்ளது. இவற்றில் அரைவாசிப் பாடசாலைகளே சுத்தமான குடிநீர் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தலீபான் காலத்தில் பெண்கள் பாடசாலைக்கு வராமல் தடுக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆப்கானியச் சிறுவரைச் சுற்றியுள்ள யுத்தம், வறுமை போன்றவை மத்தியிலும் அவர்கள் அதில் இருந்து விரைவாக மீண்டு ஆர்வமுடன் கல்விகற்பதாக சேவ்த சில்ரன் பண்ட் தெரிவித்துள்ளது.

மார்ச் 2003 ல் ஆரம்பித்த பாடசாலைத் தவணையில் சுமார் நான்கு மில்லியன் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலைகளுக்குச் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது ஆப்கானிய வரலாற்றில் மக அதிகமான தொகையாகும்.

நாட்டின் எழுத்தறிவு வீதம் 36% ஆகும் இதில் ஆண்கள் 51% ம் பெண்கள் 21% ஆகவும் உள்ளது.

உயர்கல்வி ஆப்கானில் புதிய வடிவம் எடுத்து வளர்ந்துவருகின்றது. தலீபான்களின் வீழ்சிக்குப்பின்னர் காபூல் பல்கலைக்கழகம் மீளத்திறக்கப்பட்டதுடன் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் இங்கு அனுமதி பெற்றனர். அத்துடன் 2006 ல் ஆப்கானிஸ்தானின் அமெரிக்கப் பல்கலைக்கழகமும் இங்கே அதன் கதவுகளைத்திறந்து கொண்டது. இது ஆங்கில மொழிமூலமாக உலகத்தரம் வாய்ந்த கற்கை நெறிகளை வழங்குவதைக் குறிப்பிட வேண்டும். பல்கலைக்கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்கிக்கொள்கின்றது. மசாரி ஷரிப்பில் புதிதாக அமைய உள்ளதான பால்ஹ் பல்கலைக்கழகத்தின் கட்டுமாணப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பொறியியல் திணைக்களத்திற்காக 600 ஏக்கர் நிலத்தில் 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டடம் அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu