அக்காத் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அக்காத் (லிசனம் அக்கதிதும்) |
||
---|---|---|
நாடுகள்: | அசிரியா, பபிலோனியா | |
பிராந்தியம்: | மெசொப்பொத்தேமியா | |
மொழி அழிவு: | கிபி 100 | |
மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய செமிடிக் கிழக்கு செமிடிக் அக்காத் |
|
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | இல்லை | |
ISO 639-2: | akk | |
ISO/FDIS 639-3: | akk | |
குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ உச்சரிப்பு குறிகள் யுனிகோட் வடிவில் காணப்படலாம். |
அக்காத் ஒரு செமிடிக் மொழியாகும். இது பெரிய மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். பண்டைய மெசொப்பொத்தேமியாவில் பேசப்பட்ட மொழியாகும். சுமேரிய மொழியிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. மொழியின் பெயரானது, ஆது பேசப்பட்ட ஒரு நகரான, அக்காத் நகரின் காரணமாக ஏற்பட்டதாகும்.
[தொகு] வகைகள்
அக்காத் மொழி புவியல் மற்றூம் காலம் சார்பாக பின்வருமாறு பிரித்து நோக்கப்படுகிறது.
- பழைய அக்காத் கிமு 2500 – 1950
- பழைய பபிலோனிய/பழைய அசிரியன் கிமு 1950 – 1530 BCE
- மத்திய பபிலோனிய/மத்திய அசிரியன் கிமு 1530 – 1000
- புதிய-பபிலோனிய/புதிய-அசிரியன் கிமு 1000 – 600
- பிந்திய பபிலோனிய கிமு 600 - கிபி 100
[தொகு] செமிடிக் மொழிக் குடும்ப வகைப்படுத்தல்
குறிப்பு1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. முதன்மையான இரண்டு வகைகளும் சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. பின்வரு படிமம் தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலை காட்டுகிறது. மேலதிக விபரங்களுக்கு அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை நோக்கவும்.