அக்காத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அக்காத் (அல்லது ஆகேத்) என்பது வடக்கு மெசொப்பொத்தேமியாவில் யூபிரிடிஸ் நதியின் இடது கரையில் அமைந்துள்ள நகரமாகும். இது இன்றைய ஈராக்கின் தலைநகரான பாக்தாத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தென்மேற்குத் திசையில் காணப்படுகிறது. இந்நகரம், பபிலோனியாவின் எழுச்சிக்கு முன், கி.மு.24 - கி.மு. 22 ஆம் நூற்றாண்டுகளில் சிறப்பாக விளங்கியது. இக்கலப்பகுதியில் அக்கதியர்கள் அவர்களது யுத்த திறமைகளுக்கு புகழ் பெற்று விளங்கினார்கள். அக்காத் அங்கு பேசப்படும் அக்காத் மொழிக்கு பெயர் வர காரணமாயிற்று,
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
நகரம் பற்றிய கிடைக்கும் பழைம்மையான ஆதாரங்கள் கிமு23வாது நூற்றாண்டை சேர்ந்த சார்கான் அரசன் காலத்தவையாகும்.சார்கான அக்காத் சுமேரியா வை இணைத்து ஆண்ட முதலாவது அரசனா கருதப்படுகிறார். இவரது ஆட்சியில் மத்திய தரைக்கடல் வரை இராச்சியம் பரவியது.
பிந்திய காலங்களில், பபிலோனிய அரசரின் பட்டங்களில் "அக்காத் மற்றும் சுமேரியாவின் அரசன் என்ற பதம் பாவிக்கப்பட்டது"
[தொகு] பெயர்
விவிலியத்தில் ஒர்ர் முறை இந்நகரின் பெயர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது (ஆதியாகமம் 10:10)[1]
ஆகேத் என்ற பெயர் அக்காத் என்ற பெயரின் சுமேரிய மறுவாலாக இருக்கலாம் என நம்பப்படுக்கிறது. ஆகேத் என்ற பெயர் "தீயின் முடி" என பொருள்பட்டிருக்கலாம்"[2]
[தொகு] குறிப்புகள்
- ↑ ஆதியாகமம் 10:10
- ↑ Prince, "Materials for a Sumerian Lexicon", pp. 23, 73, Journal of Biblical Literature, 1906.
[தொகு] உசாத்துணை
- A. Leo Oppenheim, Ancient Mesopotamia: Portrait of a Dead Civilization