அசாமிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அசாமிய மொழி இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழி இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. அம்மாநிலத்தின் உத்தியோகபூர்வ மொழியாகவும் உள்ளது. இது மொத்தம் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது. அருணாச்சல் பிரதேசம், பிற வட இந்திய மாநிலங்கள், பூட்டான், பங்களாதேஷ் போன்ற இடங்களிலும் இம்மொழி பேசுவோர் உள்ளனர்.