பேச்சு:அதி உயர் அதிர்வெண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மீடிறன் என்றால் என்ன என்று எனக்கு விளங்கவில்லை. Very High Frequency (VHF) என்பது ஒரு அலை அதிர்வெண் தொகுதியைக் குறிக்கும். அல்லது அந்த அலை அதிர்வெண் தொகுதியில் அடங்கும் ஒரு அலை அதிர்வெண்ணைக் குறிக்கும். எனவே அதிஉயர் அதிர்வெண் (அல்லது அதி உயர் அலைவெண்) என குறித்தல் நலம். இப்படியே மாற்றலாமா?--செல்வா 04:18, 7 ஜனவரி 2007 (UTC)
நன்றி செல்வா பக்கத்தை மாற்றியுளேன். அதியுயர் மீடிறன் என்ற சொல்லை எங்கே இருந்து பெற்றேன் என்பதை மறந்து விட்டேன் நீங்கள் கூறியது நல்ல தமிழகவுள்ளதால் மாற்றியுளேன். --Umapathy 05:44, 7 ஜனவரி 2007 (UTC)
- அதிர்வெண் என்பதே அதிகமாக இலங்கையில் பாவிக்கப்படுகிறது. ஆனால் மீடிறன் என்ற சொல்லும் இலங்கைப் பாடநூல்களில் (குறிப்பாக அரச நூல்களில்) பாவிக்கப்படுகிறது. எங்கிருந்து இச்சொல்லைக் கண்டுபிடித்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. இக்கட்டுரையின் தலைப்பு அதி உயர் அதிர்வெண் (மூன்று சொற்கள்) என்றிருப்பது நல்லது--Kanags 06:36, 7 ஜனவரி 2007 (UTC)