அனிதா பிரதாப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அனிதா பிரதாப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான இவர் டைம் இதழ் மற்றும் சி.என்.என் தொலைக்காட்சி சேவை போன்றவற்றில் பணியாற்றியவர்.மேலும் போர்ச்சூழல்கள் நிறைந்த பிரதேசங்களில் போராளிகளின் வேண்டுதல்களையும் உயர்ந்த சமூகத்தினால் ஒடுக்கப்படும் சமூகத்தினரின் போராட்டங்கள் பற்றியும் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற பல பகுதிகளில் சென்று பலதரப்பட்டவர்களையும் பேட்டி எடுத்ததில் பெருமைக்குரியவர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேட்டி எடுத்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை அரசு மற்றும் விடுதலைபுலிகளின் போர்க்கொள்கைகள் மற்றும் தமிழீழ மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளின் இன்னல்கள் போன்றவற்றை தனது அனுபவத்தில் வெளிப்படுத்தும் விதமாக இவரால் வெளியிடப்பட்ட ஜலாண்ட் ஒஃவ் பிளட் (Island of blood) நூல் மிகுந்த வரவேற்பைப்பெற்ற நூல் வெளியீடாகும்.