அல்பட்ரோஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அல்பட்ரோஸ் தென் சமுத்திரத்திலும் வட பசிபிக்கிலும் காணப்படும் கடற்பறவையினமாகும். ஆல்பட்ரோஸ் பறவைச் சோடிகள் வாணாள் முழுவதும் ஒன்றாகவே வாழ்கின்றன. பெருமளவு அல்பட்ரோஸ் பறவைகள் தனிமையான தீவுகளில் கூட்டங்களாகக் கூடுகளைக் கட்டுகின்றன. ஒரு தடவையில் ஒரு முட்டையிடுகின்றன. அல்பட்ரோஸ் பறவையினத்தில் 21 வகைகள் உள்ளன. இவற்றுள் 19 வகைகள் அழிவாபத்தை எதிர்நோக்குகின்றன.