பறவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பறவைகள் | ||||||
---|---|---|---|---|---|---|
Lemon-bellied Flycatcher |
||||||
|
||||||
Orders | ||||||
Many - see text |
பறவைகள், இருகாலி, இளஞ்சூட்டுக் குருவி வகையைச் சேர்ந்த, முட்டையிடும் முள்ளந்தண்டுள்ளவையாகும். இறகுகள், முன் அவயவங்கள் சிறகுகளாயிருத்தல், மற்றும் பொள் எலும்புகள் என்பவை பறவைகளின் முக்கியமான சிறப்பியல்புகள். உலகில் அண்ணளவாக 9000 அறியப்பட்ட பறவையினங்கள் உள்ளன.
[தொகு] அறிமுகம்
மிகச்சிறிய ஹம்மிங் பறவைகளிலிருந்து, பெரிய தீக்கோழி மற்றும் எமு வரை, பறவைகள் பல அளவுகளிலும் உள்ளன. பல பறவைகள், பறப்பதையே முக்கியமான சிறப்பியல்பாகக் கொண்டிருப்பினும், இறற்றைற்றுகள் பறக்க முடியாதவையாகும். மற்றும் பல இனங்கள், குறிப்பாக தீவுகளில் வசிப்பவை பறக்குமியல்பை இழந்துவிட்டன. பறக்கமுடியாத பறவைகளுள், பென்குயின்கள், தீக்கோழிகள், கிவிகள் மற்றும் அழிந்துபோன டோடோக்கள் என்பன அடங்குகின்றன. மனிதர்கள் அல்லது அவர்களால் அறிமுகப்படுத்தப்படும் விலங்குகள், பறக்கமுடியாத பறவைகளின் வாழிடங்களுக்குள் வரும்போது, இப் பறவைகள் அழிந்து போவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். பெரிய ஓக், பறக்கமுடியாத railகள், நியூசிலாந்தின் மோவாக்கள் என்பன இதற்கு உதாரணங்களாகும்.