ஆபிரகாம் கோவூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆபிரகாம் தோமஸ் கோவூர் Abraham Thomas Kovoor |
|
---|---|
ஆபிரகாம் கோவூர்
|
|
பிறப்பு | ஏப்பிரல் 10 1898 திருவள்ளா, கேரளா |
இறப்பு | [செப்டம்பர் 18]] 1978 கொழும்பு,இலங்கை |
பணி | பகுத்தறிவாளர், உளவியல் வல்லுனர், எழுத்தாளர், ஆசிரியர் |
ஆபிரகாம் கோவூர் (ஏப்ரல் 10, 1898 - செப்டம்பர் 18, 1878, கேரளா), பகுத்தறிவாளர், உளவியல் வல்லுனர், எழுத்தாளர், ஆசிரியர்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
கேரளாவைச் சேர்ந்த திருவள்ளா என்னும் ஊரில் பிறந்த கோவூர் வண. கோவூர் தொம்மா கத்தனார் என்பவரின் புதல்வர். கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் ஆசிரியரானார். தனது இறுதிக் காலத்தை கொழும்பில் கழித்தார். தாவரவியல் ஆசிரியராக இலங்கையில் பல பாடசாலைகளில் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் இளைப்பாறினார். சிறுநீர்ப்பையில் புற்று நோயால் அவதியுற்றாலும், இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.
தான் கடவுளின் அவதாரம் அல்லது தெய்வீக சக்தி உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிரூபிப்பதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, அதன் தலைவராக வெகு காலம் இருந்தார் கோவூர்.
[தொகு] வெளியான நூல்கள்
- Begone Godmen! Encounters with Spiritual Frauds, Jaico Publishing House, Mumbai, India.
- Gods, Demons and Spirits - Jaico Publishing House, Mumbai, India.
- Selected Works of A T Kovoor- Indian Atheist Publishers, New Delhi, India.
- Exposing Paranormal Claims - தமிழ் நாடு
- கோர இரவுகள் (வீரகேசரி வெளியீடு, கொழும்பு)
- மனக்கோலங்கள் (வீரகேசரி வெளியீடு, கொழும்பு)
- இருளும் ஒளியும் (திராவிடன் புத்தக நிலையம், சென்னை)