Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Web Analytics
Cookie Policy Terms and Conditions ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (ஏப்ரல் 18, 1858 - நவம்பர் 2, 1917, மானிப்பாய், யாழ்ப்பாணம்).

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் தந்தை ஆறுமுகம். தாய் சீதேவி. தமது 25-ஆவது வயதில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணஞ் செய்தார்.

பிள்ளையவர்களின் ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்தார். ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகியவற்றை நன்கு கற்ற பிள்ளையவர்கள், இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற, குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய சுன்னாகம் முருகேசப் பண்டிதரிடம் தமிழைச் சிறப்பாகக் கற்றார்.

தமது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார். இரு ஆண்டுகளின் பின் (1880இல்) தமிழகம் சென்று திருத்துறைப்பூண்டியில் அழகியநாதன் செட்டியாரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். சில மாதங்களின் பின் நாகப்பட்டினத்திலுள்ள Anderson & Co என்ற கப்பற்றொழில் நிறுவனத்தில் இவர் இரண்டரை ஆண்டுகள் தலைமை எழுதுவினைஞராகத் தொழிலாற்றினார். பின்னர் தமிழார்வத்தால் பிள்ளையவர்கள் உந்தப்பட்டு 1884-ல் காரைக்கால் சென்றார். அங்கே திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடார் என்னும் செல்வந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி சத்தியாபிமானி என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியேற்றார்.

1885-ல் சென்னை சென்ற முத்துத்தம்பி அந்தர்சன் தெரு என்ற இடத்தில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். சி. வை. தாமோதரம்பிள்ளையின் தொல்காப்பியம் சொல்லதிகாரப்பதிப்பும், உ. வே. சாமிநாதையரின் சிலப்பதிகாரப் பதிப்பும் இதன் மூலமே வெளிவந்தன.

1893-ல் யாழ்ப்பாணம் திரும்பிய முத்துத்தம்பிப்பிள்ளை, வண்ணார்பண்ணையில் தவத்திரு ஆறுமுக நாவலர் குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு, அங்கிருந்து பல பணிகள் புரிந்தார். நாவலர் வழியில் பணியாற்றிய பிள்ளையவர்கள், நாவலர் அச்சுக்கூடம் என்ற ஒரு அச்சியந்திரசாலையையும் நிறுவினார்.

ஒரு புத்தகசாலையும், Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் அவரால் நிறுவப்பட்டன. 1898-இல் தமிழ் வைத்திய விசாரணி என்னும் சஞ்சிகை இவரால் பிரசுரிக்கப்பட்டது.

1898-இல் ஆறுமுகநாவலரின் மருமகனும், அவரின் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவருமான த.கைலாசபிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் ஈடுபட்டு ஒத்துழைத்த பிள்ளைகளுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய செந்தமிழ் மாத இதழில் பல ஆய்வுக் கட்டுரைகள் (1902-1917) எழுதி வந்தார்.

முத்துத் தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய பல நூல்களில் இலங்கைச் சரித்திரச் சூசனம், அபிதான கோசம், ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி, யாழ்ப்பாணச் சரித்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கன. அபிதானகோசம் 1902-இல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவர முன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

[தொகு] இயற்றிய நூல்கள்

  • இலங்கைச் சரித்திர சூசனம் (1883)
  • காளிதாச சரித்திரம் (1884)
  • பிரபோத சந்திரோதய வசனம் (1889)
  • விவேகானந்த சுவாமிகள் சொற்பொழிவுகளின் சாரம் (1897)
  • அபிதானகோசம் (1902)
  • பாரதச் சுருக்கம் (1903)
  • நன்னூல் இலகுபோதம்-எழுத்ததிகாரம் (1904)
  • நன்னூல் இலகுபோதம்-சொல்லதிகாரம் (1905)
  • ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி (1907)
  • Civilian Tamil Grammar (1912)
  • நன்னூல் உதாரண விளக்கம் (1912)
  • யாழ்ப்பாணச் சரித்திரம் (1912)
  • இலங்கைப் பூமிசாத்திரம் (1914)
  • சைவ பாலபோதம் (1916)
  • தென்மொழி வரலாறு (1920)
  • ஈழமண்டலப் புலவர் சரித்திரம்
  • காளமேகப் புலவர் சரித்திரம்
  • அற்புதயோகி சரித்திரம்
  • சந்திரகாசன் கதை
  • ஸ்ரீமதி அன்னி பெசன்ட் சமய வரலாறு
  • திருவாசகம் (பதிப்பு)
  • நிகண்டு 1-5 தொகுதி (பதிப்பு)
  • புதிய இலகுபோத பிள்ளைப்பாடம் (பாடநூல்)
  • புதிய இலகுபோத பாலபாடம் 1-8 ஆம் வகுப்பு (பாடநூல்)
  • புதிய இலகுபோத இலக்கணம் 4-5 ஆம் வகுப்பு (பாடநூல்)
  • தமிழ்க்கொப்பி சட்டவெழுத்து 1-4
  • செந்தமிழ் அகராதி (வெளியிடப்படவில்லை)

[தொகு] வெளியிட்ட இதழ்கள்

  • சத்தியாபிமானி (1884) வார இதழ் (தமிழ் நாடு)
  • வைத்திய விசாரணி (1897) திங்கள் இதழ் (ஈழம்)

[தொகு] நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்

Static Wikipedia 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu