பேச்சு:இணைபயன் வளையீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உபேட்சைவளையீ - இந்த சொல்லுக்கு பெயர்க்காரணம் என்ன? இதை விட எளிமையான தமிழ்ப்பெயர் ஒன்று இருந்தால், தெரிவியுங்கள்--ரவி 07:17, 19 ஜூன் 2006 (UTC)
- (தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியிலிருந்து) நொதுமல் நிலை வளைகோடு. -- Sundar \பேச்சு 10:59, 19 ஜூன் 2006 (UTC)
நொதுமல் என்றால் neutral என்று பொருள். இது ஒரு அருமையான சொல். நொதுமநிலைக் கோடு என்பது நன்றாக இருக்கும். அணுக் கருவில் உள்ள Neutronக்கு நொதுமின்னி என்று 1970களில் இருந்து உள்ள பெயர். எனவே, நொதுமல் என்னும் சொல்லை ஆளுவது நல்லது. வேறுசொல் வேண்டுமெனில் விருப்புவெறுபற்ற நிலைக் கோடு.. அல்லது திருவள்ளுவர் சொல்வது போல, வேண்டு-வேண்டா நிலைக் கோடு. --C.R.Selvakumar 12:19, 19 ஜூன் 2006 (UTC)செல்வா
இவ் வளையீயானது/கோடு இரண்டு பண்டங்களை எவ் எவ் விகிதத்தில் நுகரும்போது ஏற்படும் ஒரே அளவான பயன்பாடுகிடைகின்றது என்பதனை குறிக்கின்றது.உபேட்சைவளையீ என்பதனை எளிமைப்படுத்துவது என்றால் சமபயன் வளையீ எனலாம் இதுவே என் கருத்து --kalanithe
- சமபயன் (அல்லது) இணைபயன் வளையீ என்பது சரியாகப்படுகின்றது.--C.R.Selvakumar 16:42, 19 ஜூன் 2006 (UTC)செல்வா