இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அறிவியல் வரையரைப்படி இயந்திரம் (Machine) என்பது ஆற்றலை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லவோ அல்லது ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்றவோ உதவும் கருவியாகும். எனினும் பொதுவாக இச்சொல் பயனுள்ள வேலையைச் செய்கின்ற அல்லது செய்ய உதவுகின்ற கருவியையே குறிக்கின்றது.
இயந்திரங்களுக்கு பொதுவாக ஆற்றல் முதலீடு (மூலம்) தேவை. மற்றும் இவை ஏதேனும் குறிப்பிட்ட பயனுடைய ஒரு வேலையைச் செய்கின்றன.
பொதுவாக வெப்ப ஆற்றலையோ அல்லது ஏதேனும் ஓர் ஆற்றலையோ நகர்ச்சி போன்ற இயங்கு ஆற்றலாக மாற்றும் இயந்திரம் உந்துபொறி அல்லது உந்து இயந்திரம் (Engine) என்று அழைக்கப்படுகிறது.