இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் பெப்ரவரி 22, 2002ஆண்டு தொடங்கப்பட்டது. இது தொடக்கத்தில் ஐந்து ஸ்கண்டினெவிய நாடுகளான நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து போன்ற நாடுகளை உறுப்பினர்களாக கொண்டிருந்த போதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகள் மீதான தடையை அடுத்து பின்லாந்து நாட்டு உறுப்பினர்களை வெளியேறச் சொல்லி விடுதலைப் புலிகள் கேட்டதை அடுத்து பின்லாந்து இவ்வமைப்பில் இருந்து விலகிக் கொண்டது.
[தொகு] அமைப்பு
இவ்வமைப்பின் தலைமை அலுவலகம் கொழும்பில் உள்ளது. ஆறு மாவட்ட அலுவலகங்கள் வடக்குக்கிழக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. மேலும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியில் ஓரு தொடர்பாடல் அலுவலகம் அமைந்துள்ளது [1]. கடற்கண்காணிப்பு அணிகள் இரண்டு யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் இருந்தபோதும் அவை 2006 ஜூன் மாதம் முதல் இயங்கவில்லை.
[தொகு] வெளியிணைப்புக்கள்
- இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (ஆங்கிலத்தில்)
[தொகு] உசாத்துணைகள்
- ↑ இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்பு அலுவலகங்கள் அணுகப்பட்டது 3 மார்ச் 2007 (ஆங்கிலத்தில்)