உதியஞ்சேரலாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சேர மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலச் சேரர்கள் | |
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் | கி.மு 1200 (?) |
கடைச்சங்க காலச் சேரர்கள் | |
உதியஞ்சேரலாதன் | கி.பி. 45-70 |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் | கி.பி. 71-129 |
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் | கி.பி. 80-105 |
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் | கி.பி. 106-130 |
செங்குட்டுவன் | கி.பி. 129-184 |
அத்துவஞ்சேரல் இரும்பொறை | (காலம் தெரியவில்லை) |
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை | கி.பி. 123-148 |
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் | கி.பி. 130-167 |
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை | கி.பி. 148-165 |
இளஞ்சேரல் இரும்பொறை | கி.பி. 165-180 |
குட்டுவன் கோதை | கி.பி. 184-194 |
மாரிவெண்கோ | காலம் தெரியவில்லை |
சேரமான் வஞ்சன் | காலம் தெரியவில்லை |
மருதம் பாடிய இளங்கடுங்கோ | காலம் தெரியவில்லை |
சேரமான் கணைக்கால் இரும்பொறை | காலம் தெரியவில்லை |
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக்கோதை | காலம் தெரியவில்லை |
பிற்காலச் சேரர்கள் | |
[[]] | கி.பி. |
edit |
உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டைஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர்[1]. சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ சு. இரத்தினசாமி, சங்க கால அரசரக்ள் (கால வரைசைப்படி), மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, பதிப்பாண்டு 1995.