உறவுமுறையும் மரபுரிமையும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உறவுமுறையும் மரபுரிமையும் மானிடவியலின் முக்கிய முக்கியமான கருத்துருவாகும். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பண்பாடுகள் தங்கள் உறவுமுறையையும் வம்சாவழியையும் அறிந்து கொள்வதற்கு பலவாறான முறைமைகளைக் கொண்டுள்ளன. மானிடவியலாளர்கள், பல்வேறுபட்ட பண்பாடுகளிலும் பொதுமையாகக் காணப்படுகின்ற எளிமையான கருத்துருக்களின் அடிப்படையில் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள்.
[தொகு] மரபுரிமைக் குழு
ஒரு மரபுரிமைக் குழு என்பது, பொதுவான முன்னோரைக் கொண்ட உறுப்பினர்களின் குழுவாகும். உலகில் நிலவும் மரபுமுறைகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- இருவழி மரபு (bilateral descent)
- ஒருவழி மரபு (unilineal descent)
- ஈரியல் மரபு (ambilineal descent)
- இணை மரபு (parallel descent)