ஊக்கிமுடுக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஊக்கியியலில் (Catalysis) ஊக்கிமுடுக்கி (Promoter) என்பது ஒரு வேதியியல் வினை நிகழ்வை ஊக்கும் வினையூக்கியுடன் சேர்ந்து வினையூக்கியின் திறனைக் கூட்டுவதாக அமையும் ஒரு பொருள் ஆகும். இவை வினையூக்கியின் தொழிற்பாட்டை விரைவுபடுத்தவோ தடை ஏற்படுத்தும் பிறவினைகளின் விளைவைக் குறைக்கவோ வினைத் தேர்வை (பொறுக்குதிறனை)க் (selectivity) கூட்டவோ செய்யும் ஒரு பொருள் ஆகும். பொதுவாக வினையூக்கியின் செயற்பாட்டை தேவைக்கு ஏற்றார்போல ஏதேனும் ஒரு வகையில் கட்டுறுத்தும் ஒரு பொருள். எனவே வினையூக்கியின் செயற்பாட்டைக் கூட்டவும் குறைக்கவும் பயன்படுத்தும் ஒரு பொருள் என்றும் பொதுவாக அறியப்படுகின்றது, ஆனால் வினையூக்கியின் செயற்பாட்டைக் குறைக்கும் பொருளுக்கு ஊக்கித்தணிப்பி என்றும் கூறுவர்.
[தொகு] மேற்கோள்
அனைத்துலக இயல் மற்றும் பயன்முக வேதியியல் ஒன்றியத்தின் கலைசொற் தொகுப்பு (IUPAC)