ஏதோமிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏதோமிய | ||
---|---|---|
நாடுகள்: | முன்னாள் தென்மேற்கு யோர்தான். | |
மொழி அழிவு: | கிமு 6வது நூற்றாண்டு | |
மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு செமிடிக் மத்திய செமிடிக் வடமேற்கு செமிடிக் கானானிய ஏதோமிய |
|
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | இல்லை | |
ISO 639-2: | sem | |
ISO/FDIS 639-3: | xdm |
ஏதோமிய மொழி அல்லது ஏதோம் மொழி அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும்.இது ஏதோம் மக்களால் பேசப்பட்ட மொழியாகும். இது இன்றைய யோர்தான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கிமு 1வது ஆயிரவாண்டுகளில் காணப்பட்ட ஒரு இராச்சியமாகும். இம்மொழியை பற்றிய தகவல்கள் பெரிதாக தெரியாது. இது கானானிய மொழிகளின் எழுத்துக்களை கொண்டு எழுதப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளரின் கருத்தாகும். கிமு 6வது நூற்றாண்டில் அறமைக் அகரவரிசைக்கு மாற்றமடைந்த்து. அரபு மொழியிலிருந்தும் பல விடயங்களை உள்வாங்கியது.
விவிலியத்தின் படி ஏதோம் என்பது, ஈசாக்குக்கு அவர்மனைவி ரெபேக்காள் மூலம் பிறந்த இரட்டை குழந்தகளில் ஒருவரான ஏசாவின் மறுபெயாராகும். ஏதோமியர் ஏசாவின் சந்த்தியர் என்பதால் அவர்களும் எபிரேய மக்கள் என கொள்ளப்பட்டனர். இதன் காரணமாக மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள நான்கு தெற்கு கானாகிய மொழிகளாகிய மோவாபிய மொழி, எபிரேய மொழி, அம்மோனிய மொழி, ஏதோமியா மொழி என்பன கூட்டாக சேர்த்து எபிரேய மொழிகள் என ஆய்வாளர்களால் அழைக்கப்படுவதுண்டு.
[தொகு] ஆதாரங்கள்
- F. Israel in D. Cohen, Les langues chamito-sémitiques. CNRS:Paris 1988.