எபிரேய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எபிரேயம் עברית ‘இவ்ரித் |
||
---|---|---|
நாடுகள்: | இசுரேல் மற்றும் ஏனைய நாடுகள்,பிரான்சு, ஐ.இ.,ஐக்கிய அமெரிக்க நாடுகள், மேற்கு கரை | |
பேசுபவர்கள்: | சுமார் 7 மில்லியன், (ஐக்கிய அமெரிக்க நாடுகள்: 195,375).[1] | |
மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு மத்திய வடமேற்கு கானானிய எபிரேயம் |
|
அதிகாரப்பூர்வ அங்கீகார நிலை | ||
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | இசுரேல் | |
கட்டுப்படுத்தல் மற்றும் நிர்வாகம்: | எபிரேய அகடமி | |
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | he | |
ISO 639-2: | heb | |
ISO/FDIS 639-3: | heb |
எபிரேயம் (עִבְרִית அல்லது עברית, இவ்ரித்) ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு செமிடிக் மொழியாகும். இது 7 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. இது இசுரேல் நாட்டின் -அரபுடன் சேர்த்து- ஆட்சி மொழியாகும். இசுரேலின் பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகிறது. ஏறத்தாழ கி.பி. 2 ஆம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் ஹஸ்கலா விழிப்புணர்வு (en:Haskalah) இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடா (Eliezer Ben-Yehuda) வின் பெரு முயற்சியால் மீண்டும் வழக்கு வந்துள்ளது.
[தொகு] குறிப்பு
- ↑ United States Census 2000 PHC-T-37. Ability to Speak English by Language Spoken at Home: 2000. Table 1a.
[தொகு] செமிடிக் மொழிக் குடும்ப வகைப்படுத்தல்
குறிப்பு1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. முதன்மையான இரண்டு வகைகளும் சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. பின்வரு படிமம் தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலை காட்டுகிறது. மேலதிக விபரங்களுக்கு அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை நோக்கவும்.