ஔவையார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஔவையார் கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பெண் புலவராவர். இவர் இளமையில் மணம் புரிய மனம் இல்லாமல் தனக்கு முதுமையை அளிக்குமாறு இறைவனிடம் வேண்டவே, இவர் முதியவரானார் என கூறப்படுவதுண்டு. இவருடைய படைப்புகளுள் ஆத்தி சூடி, விநாயகர் அகவல், கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது, ஞானக் குறள், பந்தனந்தாதி ஆகியவை அடங்கும். புறநானூறு முதலிய சங்க நூல்களில் அவரது பாட்டுக்கள் காணப்படுகின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமான் அளித்த நெல்லிக்கனியை உண்டு இவர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தாரெனச் சங்க நூல்கள் கூறுகின்றன.
ஒளவையாரின் காலம்:
உண்டிச் சுருக்குவது பெண்டிற்கு அழகு என்று கொன்றை வேந்தன் எழுதிய ஒளவை சங்ககாலத்தவரல்ல.
கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டுவரை ஒளவை என்ற பெயரில் எழுதியவர்கள் ஆறு பேர்.
கி.பி. 2ம் நூற்றாண்டு: சங்ககால ஒளவை: 59 சங்கப் பாடல்கள் எழுதியவர். அதியமான் நெடுமானஞ்சியின் தோழி
கி.பி 10 முதல் 13ம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம்: பாரி மகளிர் பற்றி எழுதிய ஒளவை
கி.பி 16 அல்லது17ம் நூற்றாண்டு: ஆத்திச் சூடி கொன்றை வேந்தன் எழுதியவர் கி.பி 18ம் நூற்றாண்டு : விநாயகர் அகவல் எழுதியவர் கி.பி 18ம் நூற்றாண்டு : அசதிக் கோவை எழுதியவர் 18ம் நூற்றாண்டுக்குப் பின்: கல்வி ஒழுக்கம் போன்ற நூல்களை எழுதியவர்
சமகாலத்தில் ஒரு ஒளவை இருக்கிறார். இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான மகாகவியின் மகள். கவிஞர் சேரனின் தங்கை. அவரை நான் மேற்குறிப்பிட்ட கணக்கில் சேர்க்கவில்லை.
ஒளவை என்ற சொல் ஒரு காலகட்டத்தில் பெண் புலவர்களைக் குறிப்பதாக இருந்தது. சீவக சிந்தாமணி எழுதிய திருத்தக்கத்தேவர் காலத்தில் பெண்புலவர்கள் என்ற சொல் ஒளவையைக் குறித்ததால், அவர் ஒளவையார்கள் என்று எழுதாமல், அவ்வைமார்கள் என்று எழுதுகிறார் ( காண்க: சீவக சிந்தாமணி - 2637)
கால உணர்வு இல்லாமல் எல்லா அவ்வையையும் ஒன்றாக்கிய குழப்பியவர்கள் திரைப்படம் எடுத்தவர்கள்.
ஒளவை கிழவியாக இருந்தார் என்றும் சஙகப்பாடல்களைக் கொண்டு கருத முடியவில்லை. அவ்வா என்பது திராவிட மொழிகளில் அம்மா என்ற பொருளில் வழங்கப்படுகிறது. அதன் நீட்சியா இது என்று தெரியவில்லை. சிலப்பதிகாரத்தில் தவ்வை என்ற சொல் தமக்கையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது
அவ்வை என்பது ஒருகாலத்தில் பெண் துறவிகளையும் குறித்தது. சமணர்கள் அந்தப் பொருளில் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவ்வையராயினீர் என்று மணிமேகலையில் ஓரிடத்தில் சாத்தன் எழுதுகிறார்.
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, அசதிக்கோவை - இவையெல்லாம் 11-12 நூற்றாண்டுகள் அல்லது முன்பு.
17-ஆம் நூற்றாண்டில் வீரமாமுனி சொல்கிறார். யாப்பருங்கல விருத்தியுரை (12-ஆம் நூற்றாண்டு) இந்நூல்கள் பேசப்படுகின்றன. இளம்பூரணர் மூதுரைப் பாடல்களை ஆள்கிறார். இதனால் 10-ஆம் நூற்றாண்டோ? என்றும் சொல்வர் (மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்., தொகுதி 1).
கொன்றை வேந்தன் ஜெர்மன் மொழியில் 1708ல் மொழிபெயர்ப்பானது (Bartholomaeus Ziegenbalg, Kondei Wenden, 1708. மறுபதிப்பு அவர் தொகுப்பில் Kleine Schriften, Amsterdam, 1930).
"18ம் நூற்றாண்டுக்குப் பின்: கல்வி ஒழுக்கம் "
"உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு" - 'சங்க கால' ஔவையாருக்குப் பின் வந்த 'பிற்கால' ஔவையார் எழுதியது.
"சங்ககால ஒளவை: 59 சங்கப் பாடல்கள் எழுதியவர். அதியமான் நெடுமானஞ்சியின் தோழி" என்று கூறிய தாங்கள், அதற்கு அடுத்துவந்த ஔவையாரைப் பற்றிக் கூறும்போது, அவர் "கி.பி 10 முதல் 13ம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம்: பாரி மகளிர் பற்றி எழுதிய ஒளவை" என்று கூறியிருப்பது ஏற்கத்தக்கதன்று.
பாரிமகளிர் காலமும் சங்க காலம்தான்! 'கடையேழு வள்ளல்கள்' என்று, இப்போது 'பொதுவாக' வழங்கப்படும் குறு நிலமன்னர்கள் ஏழு பேருமே -பாரி உட்பட-சங்க காலத்தவர்தாம்! பாரியின் பெயர் வரும்படியாக அக நானூறு (பாடல் எண்:303-வரி:10) பாடிய ஔவையாரும் ஒரே காலம்தான்! பாடலில் வருவதாலேயே அவர் அந்தக் காலத்தவராகத்தான் இருக்கவெண்டும் என்பதில்லை என்றால், குறு நில மன்னர்/மூவேந்தர் கால ஒப்புமை பற்றிய விளக்கத்தைப் பார்க்கவேண்டும். (நூல்:'தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்' - தமிழ் நாடு வரலாற்றுக் குழு -தமிழக அரசு Text book Societyவெளியீடு/ 1983, பட்டியல் பக்கம்:507)
"அவ்வையார் அப்போதே வயது முதிர்ந்தவராக இருந்தார்.அதனால், ஆயுள் நீட்டிப்புக்காகத் தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை அதியமான் தான் உண்ணாமல் அவ்வைக்குக் கொடுத்தான்" என்பது மு.வ.அவர்களின் கருத்து. (மு.வரதராசனார் எழுதி, சாகித்திய அகாதெமி வெளியிட்ட 'தமிழ் இலக்கிய வரலாறு' 16ம் பதிப்பு-'01,பக்கம் 180) இந்த அதிகமானைப் பற்றித்தான் அதிகமான பாடல்களை(24) வையார் பாடியிருக்கிறார்!
"தவ்வை என்ற சொல் தமக்கையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது" எனும் தங்களின் கருத்து சரிதான், அதோடு 'தவ்வை' எனும் சொல்லுக்கு 'மூதேவி' எனும் பொருள் வழக்கும் உண்டு, இங்கு அது பொருந்தாது! 'நுவ்வை' எனும் சொல்லும், நற்றிணையில் 'தமக்கை' எனும் பொருளில் வந்துள்ளது.
"அவ்வா என்பது திராவிட மொழிகளில் அம்மா என்ற பொருளில் வழங்கப்படுகிறது" -
இவ்வளவு ஏன்? 'அவ்வா' எனும் சொல்லிலேயே அம்மாவை அழைப்பதையும் தமிழகத்தின் சில பகுதிகளில் -குறிப்பாகத் 'தெலுகில் பேசும்' நண்பர்களின் வீட்டில்- பார்க்க முடியுமே! சில இடங்களில் அம்மாவின் அம்மாவையும் அவ்வாறு அழைப்பது உண்டு! அதைப் பார்க்கும் போது, வடமொழிச்சொல் தமிழில் வழங்குமிடத்தில் "ஆ" என்பது "ஐ" என மாறி (சீதா - சீதை என்பது போல) வரும் வழக்கத்துடன் ஒப்பிட்டால் 'அவ்வா -ஔவா' எனும் வழக்கு, 'அவ்வை / ஔவை' என வருவதில் ஒன்றும் வியப்பில்லையே?
ஆக, அம்மா எனும் பொருளில் தான் ஒளவை இருந்திருக்கிறது என்பது சரிதான்.
"கி.பி 16 அல்லது17ம் நூற்றாண்டு: ஆத்தி் சூடி கொன்றை வேந்தன் எழுதியவர்" "கி.பி 18ம் நூற்றாண்டு : விநாயகர் அகவல் எழுதியவர்"
இவ்வளவு கிட்டினும் இறுதியாக ஒரு முடிவுக்கும் வரையலவில்லை.