கந்தகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கந்தகம் ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு S. இத்தனிமத்தின் அணு எண் 16. இது புவியில் மிகுந்து கிடைக்கும் சுவையற்ற அலோகம் ஆகும். கந்தகம் இயற்கையில் மஞ்சள் நிறப் படிகமாகக் கிடைக்கிறது. அழுகிய மணம் கொண்டது. இது இயற்கையில் தனிமம் ஆகவும் சல்பைடு, சல்பேட்டு கனிமங்களாகவும் கிடைக்கிறது.
இது உயிர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. இரு அமினோஅமிலங்களிலும் இது காணப்படுகிறது. இது வணிக நோக்கில், உரம், வெடிமருந்து, தீக்குச்சி, பூச்சிக் கொல்லி போன்றவை தயாரிப்பில் பயன்படுகிறது.