பேச்சு:கரடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எல்லா கரடிகளும் ஊனுண்ணிகள் இல்லை. சில கரடிகள் பழங்கள், தேன் போன்றுவற்றையும் உண்ணும். --Natkeeran 17:20, 27 மே 2006 (UTC)
பசித்தாலும் புலி புல் உண்ணாது என்று கூறுவது உண்டு. ஆனால் அது உண்மை இல்லை. புலி புல்லையும் உண்பதை அறிஞர்கள் கண்டு எழுதி இருக்கிறார்கள். இறைச்சியை மட்டுமே உண்ணும் விலங்கு வகை அல்ல ஊனுண்ணி என்பது. மிகப் பெரும்பாலும் ஊனுண்ணும் விலங்கு இனம். ஆசியக் கருங்கரடி போன்ற சிறிய கரடி வகைகள் omnivorous. இதைப்பற்றி இன்னும் விரிவாகவும் தெளிவாகவும் எழுத வேண்டும். கரடி இனம் ஊனுண்ணி வகையச் சார்ந்தது, அவற்றுள் சில தேன், பழம் பூச்சி போன்ற உணவையும் உட்கொள்ளும். மாற்றிவிடலாம். நன்றி. --C.R.Selvakumar 18:13, 27 மே 2006 (UTC)செல்வா
நற்கீரன், சுருக்கமாக விளக்கத்தைத் திருத்திச் சேர்த்து இருக்கிறேன். இன்னும் எழுத நிறைய உள்ளது. --C.R.Selvakumar 18:22, 27 மே 2006 (UTC)செல்வா