கரடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கரடி | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
கோடைக் பழுப்புக்கரடி
|
||||||||
அறிவியல் வகைப்பாடு | ||||||||
|
||||||||
|
||||||||
ஐலுரோபோடா- (Ailuropoda) உர்சுஸ்- (Ursus) டிரெமாக்டஸ்- (Tremarctos) ஆர்க்டோடஸ்- (Arctodus) (அழிந்துவிட்டது) |
கரடி (Bear) இறைச்சியை உண்ணும் ஊனுண்ணிப் பிரிவில் உள்ள ஒரு விலங்கு. கரடிகள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவையாகும். இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) என்னும் பழுப்பு நிறக்கரடிகளும். ஊனுண்ணிப் பாலூட்டிகள் யாவற்றினும் மிக பெரியது. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் எல்லாமுண்ணிகளாக உள்ளன.
உயிரின அறிவியலார் கரடியினத்தை ஊர்சிடே (Ursidae) என்னும் பெரும் பிரிவில் காட்டுவர். ஊர்சசு (Ursus) என்றால் இலத்தீன் மொழியில் கரடி என்று பொருள். இதன் அடிப்படையில் ஊர்சிடே என்பது இவ்வினத்தைகுறித்தது. இந்த ஊர்சிடேயின் உட்பிரிவில் ஐந்தே ஐந்து இனங்கள் தாம் உள்ளன. அவற்றுள் நான்கினுடைய உட்பிரிவில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகைதான் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே மட்டும் தான் சில வகை கரடிகள் வாழ்கின்றன. நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை. உடலில் அதிக உரோமங்களைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டு கால்களினால் மட்டுமே நிற்க வல்லவை. கரடிகளில் பல வகைகள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] கரடி இன வகைகள்
- பனிக்கரடி
- கொடுங்கரடி
- அமெரிக்கக் கருங்கரடி
- வெண்கண்வளையக் கரடி இரு கண்களைச்சுற்றியும் இருவெள்ளையான வளையம் இருப்பதால் இதனை மூக்குகண்ணாடிக் கரடி என்றும் அழைப்பர்.
- அசையாக்கரடி சுலாத்துக் கரடு (Sloth bear)
- ஆசியக் கருங்கரடி
- மலேயக் குறுங்கரடி யாவற்றினும் சிறிய கரடி.
[தொகு] வாழ்விடங்களும் வாழ்வியலும்
[தொகு] அருகி வரும் இனத்தைக் காத்தல்
[தொகு] தமிழில் "கரடி" என்ற சொல் பாவனை
- கரடி சந்தை
- 'கரடி' விடுறது
- சிவபூசையில் 'கரடி' போல
- கரடிபோலே வந்து விழுந்தான்
- கரடிக்கூடம்
- கரடிப்பறை
- கரடிகை
- கரடியுறுமல்
- கரடிவித்தை
[தொகு] கரடிப் படங்கள்
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புகள்
- BearPlanet - Infos for all species of bears
- Chuck Bigelow, note on PIE roots signifying "bear"
- Spanish bear news regularly-updated news archive on bears in Spain
- The Brown Bear: Father of the Polar Bear? Alaska Science Forum Article #1314
- Brown Bear (Ursus arctos) facts and photos - Wild Animals Online encyclopedia
- [1] - Facts about Black Bear hibernation
- Stephen Colbert inspired bear petition