கழுகு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கழுகுகள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() கழுகு |
||||||||||
அறிவியல் வகைபிரிப்பு | ||||||||||
|
||||||||||
|
||||||||||
கழுகு என்பது ஒரு வலுவான பெரிய பறவையையும் அதன் இனத்தையும் குறிக்கும். இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் கொன்றுண்ணிப் பறவைகள் (birds of prey) என்று சொல்வதுண்டு. வானில் இருந்து திடீர் என்று கீழே பாய்ந்து விலங்குகளைக் வல்லூகிரால் பற்றுவதைத் தமிழில் ஏறு என்னும் சிறப்புக் கலைச்சொல்லால் குறிக்கப் பெறும் [பருந்தின் ஏறுகுறித் தொரீஇ (புறநானூறு 43, 5)]. வானில் இருந்து இடிவிழுவதையும் ஏறு என்னும் சொல்லால் குறிக்கப்பெறும். ஏறு என்பதற்கு தமிழில் பருந்தின் கவர்ச்சி என்றும் பெயர்.
கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு என அழைக்கப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து குடுமி எழால் என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.
கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை வெண்டலைக் கழுகும், பொன்னாங் கழுகும் ஆகும். கழுகுகளில் பெட்டைக் கழுகு சேவற்கழுகை விட சற்று பெரிதாக இருக்கும்.