கார உலோகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கார உலோகங்கள் என்பவை ஒரு வேதிப்பொருள் தொடராகும். இவை ஆவர்த்தன அட்டவணையிலுள்ள கூட்டம் 1-இன் தனிமங்களாகும். இக்கூட்டம், ஐதரசன், லித்தியம், சோடியம், பொட்டாசியம், ருபிடியம், சீசியம், பிரான்சியம் என்பவற்றை உள்ளடக்கும்.
கார உலோகங்கள் வெள்ளி நிறமும், மெதுமையும், குறைந்த அடர்த்தியும் கொண்ட உலோகங்களாகும். இவை அலசன்களுடன் உடனடித் தாக்கமுற்று, அயன் உப்புக்களையும், நீருடன் வலுவான கார ஐதரொட்சைட்டுகளையும், தருகின்றன. இத்தனிமங்கள் எல்லாம், அவற்றின் வெளி ஒழுக்கில், ஒரு இலத்திரனைக் கொண்டிருப்பதால், சக்தி அடிப்படையில் விருப்பத்துக்குரிய நிலை, ஒரு இலத்திரனை இழந்து, ஒரு ஏற்றமுள்ள அயன் ஆவதேயாகும்.