குமாரசாமிப்புலவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுன்னாகம் குமாரசாமிப்புலவர் (1854-1922, சுன்னாகம், யாழ்ப்பாணம்) இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார். வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார். சாணக்கிய நீதி வெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம் என்பவை அவை. சிசுபாலவதம் உரைநடை மொழிபெயர்ப்பு ஆகும். சில இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது அவர் தந்த ஒரு வரலாற்று நூல். வேறு சில செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றினார்.