குளோட் மொனெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குளோட் மொனே (Claude Monet) (நவம்பர் 14, 1840 - டிசம்பர் 5, 1926) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியராவார். இவர் ஒஸ்கார் குளோட் மொனே் அல்லது குளோட் ஒஸ்கார் மொனே எனவும் அறியப்பட்டவர். இவர் உணர்வுப்பதிவுவாத (impressionist) இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் வரைந்த உணர்வுப்பதிவு, சூரியோதயம் என்னும் பெயரிடப்பட்ட ஓவியமே அந்த ஓவிய இயக்கத்துக்கும் அப்பெயர் வரக் காரணமாயிற்று.
[தொகு] வாழ்க்கை
மொனே பாரிஸ் நகரில் பிறந்தார். ஆனால் இவருக்கு ஐந்து வயதானபோது இவரது குடும்பம், நோர்மண்டியிலுள்ள லெ ஹாவ்ரே என்னுமிடத்துக்கு இடம் பெயர்ந்தது. இவரது தந்தையார் ஒரு பலசரக்கு வணிகர். தன்னைத் தொடர்ந்து மொனெட்டும் தங்கள் குடும்ப வணிகத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் மொனே ஒரு ஓவியராவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் ஒரு கேலிச் சித்திர ஓவியராகவே இவரை உள்ளூர் மக்களுக்குப் பரிச்சயமானார். அவர் கரிக் கோலினால் வரையப் பட்ட கேலிச் சித்திரங்களை விற்றுவந்தார். நோர்மண்டியின் கடற்கரைகளில் இயூஜீன் பௌதின் (Eugène Boudin) என்னும் இன்னொரு ஓவியருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. மொனே இவரிடமிருந்து எண்ணெய் ஓவியங்களை (oil paints) வரைவதற்குப் பயின்றதுடன் வெளிப்புற ஓவிய நுட்பங்களையும் கற்றுக்கொண்டார்.
மொனே, த லுவர் (The Louvre) என அழைக்கப்பட்ட அரும்பொருட் காட்சியகத்தைப் பார்வையிட பாரிஸ் சென்றபோது அங்கே பல ஓவியர்கள் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களைப் போலவே தாங்களும் வரைவதை அவதானித்தார். ஆனால் மொனே தான் காண்பதை வரைவதிலேயே ஆர்வம் காட்டினார்.
மொனெட் ஏழு ஆண்டுகளுக்கான இராணுவ சேவையை ஏற்றுக்கொண்டு 1860 இல் அல்ஜீரியாவில் பணியாற்றத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில் நோய்வாய்ப்படவே இவரது உறவினரொருவரின் தலையீட்டின் பேரில் இராணுவத்திலிருந்து வெளியே வர முடிந்தது. இதற்காக பல்கலைக் கழகமொன்றில் ஓவியப் பயிற்சி நெறியொன்றை மேற்கொள்வதாக இவர் ஒத்துக்கொண்டார். ஆனாலும் மரபு சார்ந்த ஓவியப் பயிற்சியில் ஆர்வம் இல்லாமையால், 1862 இல் பாரிஸிலிருந்த சார்ல்ஸ் கிளேயர் என்பவரின் ஓவியக்கூடத்தில் (studio) சேர்ந்தார். அங்கேதான் இவருக்கு பியரே-ஒகஸ்ட்டே ரெனோயர் (Pierre-Auguste Renoir), பிரெடெரிக் பஸில்லே (Frederic Bazille), அல்பிரட் சிஸ்லே (Alfred Sisley) போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஓவியம் வரைவதில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து வந்தனர். இதுவே பின்னர் ஓவியத்தில் உணர்வுப்பதிவுவாதம் (impressionism) என அறியப்படலாயிற்று.
1866 இல் மொனே, தனது முதல் மனைவியான கமீலே டொன்சியுக்ஸ் என்பவரை வைத்து வரைந்த பச்சை ஆடை உடுத்திய பெண் (The Woman in the Green Dress) என்று பெயரிடப்பட்ட ஓவியமே இவருக்கு அங்கீகாரத்தைத் தேடித் தந்தது.
[தொகு] உசாத்துணைகள்
- குளோட் மொனேயின் வரலாறு
- மொனேயின் வரலாறு
- Biography at Foundation Claude Monet à Girerny
- All About Artists biography of Monet
- குளோட் மொனே- வரலாறு
[தொகு] வெளியிணைப்புகள்
- குளோட் மொனே படிமங்கள்
- குளோட் மொனே
- குளோட் மொனெட்டின் ஓவியம்: இணையக் காட்சியகமும், வளங்களும்
- இணைய அருங்காட்சியகத்தில் மொனெட் பக்கம்
- குளோட் மொனேயின் மேற்கோள்கள்
- சான்பிரான்சிஸ்கோ நுண்கலை அரும்பொருட் காட்சியதிலுள்ள மொனே படிமங்கள்
- Claude Monet by himself
- குளோட் மொனே: ஒரு இணைய ஓவியக் காட்சியகம்
- குளோட் மொனேயின் ஓவியங்கள்