கே. பாலசந்தர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கே. பாலசந்தர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, நெற்றிக்கண், உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார்.
[தொகு] கே. பாலசந்தர் இயக்கிய படங்கள்
- நீர்குமிழி
- இரு கோடுகள்
- பாமா விஜயம்
- தாமரை நெஞ்சம்
- எதிர் நீச்சல்
- அபூர்வ ராகங்கள்
- தண்ணீர் தண்ணீர்
- அச்சமில்லை அச்சமில்லை
- அக்னிசாட்சி
- வறுமையின் நிறம் சிகப்பு
- புதுப்புது அர்த்தங்கள்
- வானமே எல்லை
- ஜாதிமல்லி
- நூற்றுக்கு நூறு
- கல்கி
- பார்த்தாலே பரவசம்
- பொய்