கொரில்லா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொரில்லா, மனிதர்களுக்கு இனமான, ஆப்பிரிக்காவில் வாழும் வாலில்லாப் பெரிய மனிதக்குரங்கினம். மனிதர்களும் கொரில்லாக்களும் சிம்ப்பன்சி போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் முதனி எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை. முதனிகளில் யாவற்றினும் மிகப் பெரியது கொரில்லா தான். இது சுமார் 1.7 மீ (5 அடி 6 அங்குலம்) உயரம் இருக்கும். கை முட்டிகளால் ஊன்றி நடக்கும். ஆண் கொரில்லாக்கள் 150 கிலோ கிராம் (330 பவுண்டு) எடை இருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண்களில் பாதி எடை இருக்கும்.
பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை இலைதழை பழம், கிழங்கு உண்ணிகள்; என்றாலும் சிறிதளவு பூச்சிகளையும் உண்ணும் (உணவில் 1-2% பூச்சிகள் என்பர்); வாழ்நாள் 30-50 ஆண்டுகள். பெண் கொரில்லாக்கள் கருவுற்று இருக்கும் காலம் 8.5 மாதங்கள். இவை 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கருவுருகின்றன. பெரும்பாலும் எல்லா கொரில்லாக்களும் B இரத்த வகையைச் சார்ந்தது என்று அறிந்திருக்கிறார்கள். இதனுடைய மரபு ஈரிழையில் (டி. என். ஏ DNA) 92.9% மனிதர்களுடன் ஒன்றாக இருப்பதால் இது சிம்ப்பன்சிக்கு அடுத்தாற்போல மனிதனுடன் நெருக்கமான உயிரினம் என்பார்கள்.
[தொகு] வாழ் முறைகள் வாழிடங்கள்
[தொகு] இவற்றையும் பார்க்க
- கொரில்லா உண்ணும் காட்சி (கோப்பு விவரம்)
- ஜனவரி 2006ல், Disney animal kingdomல் பதிவு செய்யப்பட்ட, ஒரு கொரில்லா உண்ணும் காட்சி.
- ஒளிக்கோப்பை பார்ப்பதில் சிக்கலா? பார்க்கவும் ஊடக உதவி.
[தொகு] வெளி இணைப்புகள்
- மேற்கு ஆப்பிரிக்க கொரில்லாக்களைப் பற்றிய நிலை, அசை படங்கள்(கொரில்லா கொரில்லா). (ஆங்கிலத்தில்)
- கிழக்கு ஆப்பிரிக்க கொரில்லாக்களைப் பற்றிய நிலை, அசை படங்கள்(கொரில்லா) (கொரில்லா பெரிங்கை ,Gorilla beringei). (ஆங்கிலத்தில்)
- Bagheera நிலவுலகில் அழிந்து அருகிவரும் விலங்குகளைப்பற்றிய கல்விக்கான வலைத்தளம். (ஆங்கிலத்தில்)
- கொரில்லா புகலிடம் - கொரில்லாவைப்பற்றிய செய்திகள். (ஆங்கிலத்தில்)
- Gorillas Online - natural history, genetics, conservation and photos
- The Gorilla Foundation, home of Koko the gorilla famous for her sign language skills
- Tim Knight's Gorilla Gallery - gorilla pictures
- Primate Info Net Gorilla Factsheet - taxonomy, ecology, behavior and conservation
- San Diego Zoo Gorilla Factsheet - features a video and photos
- World Wildlife Fund: Gorillas - conservation, facts and photos
- Mountain Gorilla - and also a lot of facts about gorillas
- Gorillas at Prague Zoo - hit reality-tv show (24/7) of live gorillas at the Prague Zoo
- Gorilla quic facts
- The Dian Fossey Gorilla Fund International