கொழும்பு ஆட்கடத்தல்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொழும்பில் 2006 இல் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் கடத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மிகத் தீவிரமாயிருக்கும் கொழும்பில் அரச படையின் பாதுகாப்புடன் அரச ஒட்டுக் குழுக்களால் கொழும்புவாழ் தமிழர்களும் வடகிழக்குத் தமிழர்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்படுகின்றனர். இவர்களில் சிலர் சூட்டு வெட்டுக் காயங்களுடன் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். சிலர் பெருமளவு பணம் செலுத்தி விடுவிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலை என்னாவாயிற்று என்று தெரியவில்லை.[ஆதாரம் தேவை]