சஞ்சய் காந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சஞ்சய் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகனும், அதே பதவியை வகித்த ராஜீவ் காந்தியின் தம்பியுமாவார். இந்திரா இவரைத் தனது அரசியல் வாரிசாக வளர்த்து வருவதாகக் கருதப்பட்டது. ஆனால் இவரே ஓட்டிச் சென்ற விமானமொன்று விழுந்து நொருங்கி இவர் கொல்லப்பட்டதில், இந்திரா காந்திக்குப் பின் ராஜீவ் பிரதமரானார்.