சி. வன்னியசிங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சி. வன்னியசிங்கம், ஜீ. ஜீ. பொன்னம்பலத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூலம் இலங்கை அரசியலில் நுழைந்தார். பொன்னம்பலத்துடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடுகளைத் தொடர்ந்து கட்சியை விட்டு விலகி தமிழரசுக் கட்சியைச் செல்வநாயகம் ஆரம்பித்தபோது அக்கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் இவர். யாழ்ப்பாண மாவட்டத்தின் கோப்பாய்த் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார்.