சேலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சேலம் | |
மாநிலம் - மாவட்டங்கள் |
தமிழ்நாடு - சேலம் |
அமைவிடம் | 11.65° N 78.17° E |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
ச.கி.மீ
|
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) - மக்களடர்த்தி |
693,236 - /ச.கி.மீ |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 636 --- - +0427 - TN 27, Tn 30 |
சேலம் (ஆங்கிலம்:Salem), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். சேலம் தமிழ்நாட்டின் ஐந்தாவது பெருநகரமாகும். இம்மாநகரை மாங்கனி நகரம் என்றும் அழைபார்கள்.
பொருளடக்கம் |
[தொகு] புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11.65° N 78.17° E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 278 மீட்டர் (912 அடி) உயரத்தில் இருக்கின்றது.
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 693,236 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சேலம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சேலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] வரலாறு
சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள். சேலம் மற்றும் கோவை பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயகர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768'ல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹய்தெர் அலி கட்டுப்பாடிற்கு சென்றது. பின்பு 1799'ல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது.
சி.வி. ராஜகோபாலசாரியார், சி. விஜயராகவாச்சாரி, ராமசாமி உடையார் ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.
[தொகு] பொருளாதாரம்
சேலம் உருக்குஆலை தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்சாலை ஆகும். இது தவிற நூற்ப்பாலை, வாகன உதிரிபாக ஆலை, சேகோ ஆலை ஆகியவையும் உள்ளன. கோழி பன்னைகளும் அதிக அளவில் உள்ளன. இங்கு உள்ள லீ-பஜார், மஞ்சள், கடலை, தேங்காய், அரிசி போன்ற விவசாயம் சார்ந்த சந்தைக்கு பிரசித்தி பெற்றது. பொதுவாக மாம்பழதுக்கு பெயர் போன நகரம் என்பதால் இங்கு அதுவும் பிரசித்தி.
விரைவில் இங்கு ஒரு தகவல் தொலிற்நுட்ப பூங்கா அமையவிருக்கிறது.
[தொகு] ஆன்மீக தலங்கள்
சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் கோவிகளை காணலாம். இங்கு உள்ள முக்கிய கோயில்கள் சில,
- சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்-இந்த கோவிலின் திருவிழா மாநகரின் முக்கிய திருவிழாவாகும்.
- கந்தாஸ்ரமம்
- சித்தர் கோவில்- இது சித்தர்கள் கட்டிய கோவில் என்றும், இந்த கோவில் அமைந்து உள்ள கஞ்சமலையில் சித்தர்கள் இன்றும் வசிப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
- சேலம் கோட்டை பெருமாள் கோவில்
- ஊத்துமலை முருகன் கோவில்
- குமரகிரி
- தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
[தொகு] கல்வி
கடந்த சில ஆண்டுகளாக சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பெருமளவில் கல்வி நிறுவனங்கள் வளர்ந்து உள்ளது. பெரியார் பல்கலைகழகம் இங்கு அமைந்துள்ளது. அனைத்து துறை சார்ந்த கல்லூரிகளும் இந்த பகுதியில் பெருமளவு அமைந்துள்ளது. தரமான பள்ளிகளும் பெருமளவில் உள்ளன.
[தொகு] போக்குவரத்து
[தொகு] சாலை
சேலம் மாநகரம் சாலை போக்குவரத்தின் முக்கிய சந்திப்பு ஆகும். மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் இங்கு கடக்கின்றன.
- தே.நெ. எண்:7 (ஜம்மு-கன்னியாகுமாரி)
- தே.நெ. எண்:47 (சேலம்- கொச்சி)
- தே.நெ. எண்:65 (சேலம்- உளுந்தூர்பேட்டை)
ஆகையால் சென்னை, கோவை, பெங்களூர், மதுரை, திருச்சி, கொச்சி, பாண்டிச்செரி ஆகிய ஊர்களின் இடையே ஆன போக்குவரத்துக்கு இது ஒரு முக்கிய சந்திப்பாகும்.
[தொகு] ரயில்
2007ம் ஆண்டு முதல் சேலத்தை தலைமை இடமாக கொண்டு தனி சேலம் ரெயில்வெ கோட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. பாலகாடு கோட்டதில் இருந்த தமிழக ரெயில்வெ பகுதிகள் இப்பொழுது சேலம் ரெயில்வெ கோட்டதில் சேர்க்கப்பட்டுள்ளது.
சேலம் சந்திப்பு சென்னை-கோவை, மற்றும் கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களின் முக்கிய சந்திப்பு.
[தொகு] விமானம்
சேலம் கமலாபுரத்தில் ஒரு விமானநிலையம் 1993'ல் அமைக்கபட்டது. விமானசேவை எதுவும் இப்போது செயல்படுவது இல்லை.
[தொகு] ஆதாரங்கள்
- ↑ Salem. Falling Rain Genomics, Inc. இணைப்பு ஜனவரி 30, 2007 அன்று அணுகப்பட்டது.
- ↑ 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை. இணைப்பு ஜனவரி 30, 2007 அன்று அணுகப்பட்டது.
தமிழ்நாடு
|
|
---|---|
தலைநகரம் | சென்னை |
மாவட்டங்கள் | ஈரோடு • கடலூர் • கரூர் • கன்னியாகுமரி •
காஞ்சிபுரம் • கிருஷ்ணகிரி • கோயம்புத்தூர் • சிவகங்கை • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தர்மபுரி • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருவண்ணாமலை • திருவள்ளூர் • திருவாரூர் • தூத்துக்குடி • தேனி • நாகப்பட்டினம் • நாமக்கல் • நீலகிரி • புதுக்கோட்டை • பெரம்பலூர் • மதுரை • இராமநாதபுரம் • விருதுநகர் • விழுப்புரம் • வேலூர் |
முக்கிய நகரங்கள் | அம்பத்தூர் • ஆலந்தூர் • ஆவடி • ஈரோடு • கடலூர் • காஞ்சிபுரம் • கும்பகோணம் • கோயம்புத்தூர் • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தாம்பரம் • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருப்பூர் • திருவண்ணாமலை • திருவொற்றியூர் • தூத்துக்குடி • நாகர்கோயில் • நெய்வேலி • பல்லாவரம் • புதுக்கோட்டை • மதுரை • இராஜபாளையம் • வேலூர் |