அடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அடி (Foot) என்பது SI அலகு அல்லாத நீள அலகாகும். ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும். 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு கெஜமும் (Yard)ஆகும். அடியை குறிக்க ′என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.