ஜிப்சம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜிப்சம் என்பது, இரு நீர்மூலக்கூறுகளால் நீரேற்றப்பட்ட மிக மென்மையான ஒரு கனிமம் ஆகும். இதன் வேதியியல் குறியீடு, CaSO4·2H2O ஆகும்.
[தொகு] வேதியியல் அமைப்பு
ஜிப்சத்தை, 100°C க்கும் 150°C (302°F) க்கும் இடையில் வெப்பமாக்கும்போது, அதிலுள்ள 75% நீர் அகற்றப்படுகிறது. இவ்வாறு பகுதி நீரகற்றப்பட்ட ஜிப்சம், பொது வழக்கில் பாரிசுச் சாந்து (plaster of Paris) (CaSO4·½H2O) எனப்படுகின்றது.
நீரகற்றல் பொதுவாக 80°C (176°F) இல் தொடங்கிவிடுகிறது. உலர்ந்த வளியில் ஒரு பகுதி நீரகற்றல் 50°C யிலேயே ஓரளவுக்குத் தொடங்கிவிடும். இதன்போது வெளிவிடப்படும் வெப்பம், நீரை ஆவியாக்கி வெளியேற்றுவதிலேயே பயன்படுவதால் ஜிப்சத்தின் வெப்பநிலை மிக மெதுவாகவே உயர்கின்றது. நீர் போனபின் வெப்பநிலை வேகமாக உயரும்.